AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னையை சேர்ந்த மருத்துவ மாணவர்.. விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பியது எப்படி?

Air Crash: அகமதாபாதில் நடந்த விமான விபத்தின் போது மருத்துவ கல்லூரி விடுதியின் முதல் மாடியில் இருந்து குதித்து தப்பியதாக சென்னை சேர்ந்த மருத்துவ மாணவர் டாக்டர் அருண் பிரசாந்த் தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் வெளியே வந்த பிறகு தான் அது விமான விபத்து என தெரிந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த மருத்துவ மாணவர்.. விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பியது எப்படி?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 13 Jun 2025 20:11 PM IST

ஏர் இந்தியா விமான விபத்து: அகமதாபாத்தில் 2025 ஜூன் 12-ம் தேதி நடைபெற்ற ஏர் இந்திய விமான விபத்தின் (Air India Plane Crash) போது பிஜே மருத்துவ கல்லூரி (BJ Medical College) விடுதியில் உணவு அருந்தி கொண்டிருந்த சிலர் முதல் மாடியில் இருந்து குதித்து தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் அதாவது 2025 ஜூன் 12 பிற்பகல் 1:38 மணி அளவில் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதிலிருந்த 229 பயணிகளும் 12 கேபின் க்ரூ பணியாளர்கள் உட்பட 241 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட பகுதியில் தொடர்ச்சியாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விபத்து நடந்த பகுதியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அந்த விபத்து தொடர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ கல்லூரி விடுதியில் இருந்து தப்பியது எப்படி?


ஏர் இந்தியா விமான விபத்தின் போது பிஜே மருத்துவ கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்கள் பலரும் முதல் மாடியில் இருந்து குதித்த வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய சென்னையை சேர்ந்த மருத்துவ மாணவர் டாக்டர் அருண் பிரசாந்த், “ ஜூன் 12 2025 அன்று பிற்பகல் 1:30 மணி அளவில் அனைவரும் ஐந்தாவது மாடியில் உணவு அருந்தி கொண்டிருக்கும் பொழுது பலத்த சத்தத்துடன் ஏதோ ஒன்று வெடித்ததை கேட்டோம் என்றும் உடனடியாக அப்பகுதி முழுவதும் புகையால் சூழப்பட்டது எனவும் தெரிவித்தார். மேலும் உடனடியாக ஐந்தாவது மாடியில் இருந்து முதல் மாடிக்கு ஓடிச்சென்று அங்கிருந்து கீழே குதித்ததாக குறிப்பிட்டுள்ளார். அந்த நிகழ்ச்சி நடந்தபோது ஒரு சில குடும்பத்தினர் அந்த கட்டிடத்திற்குள் இருந்ததாகவும், அங்கிருந்து வெளியே வந்த பிறகுதான் விமான விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அகமதாபாதியில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானம் ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையில் விழுந்து சுக்குநூறாக நொறுங்கியது. விமானம் புறப்பட்ட உடனே விமானத்தில் இருந்த விமானி மே டே அழைப்பை விடுத்ததாகவும் ஆனால் அதன் பிறகு அந்த விமானத்திலிருந்து எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை எனவும் வான் கட்டுப்பாட்டு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்துக்குள்ளான விமானத்தின் பிளாக் பாக்ஸ் மீட்கப்பட்டுள்ளது. பிளாக் போக்ஸ் மீட்கப்பட்டிருக்கும் நிலையில் ஏர் இந்தியா விமான விபத்து எப்படி நடைபெற்றது, என்ன ஆனது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகார வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Follow Us