டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம்: பயங்கரவாதிகள் பயன்படுத்திய ‘டெட் டிராப்’ இ-மெயில்.. வெளியான திடுக் தகவல்!!

Delhi Blast Probe: எந்தவொரு இ-மெயிலும் சர்வரிலிருந்து வெளியேறாததால், வழக்கமான அனுப்பப்பட்ட அல்லது பெறப்பட்ட மெட்டாடேட்டா வடிவத்தில் எந்த டிஜிட்டல் தடயத்தையும் இவை ஏற்படுத்தாது எனக் கூறப்படுகிறது. அதாவது, உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் டிராப்ட்டாக (drafts) மட்டுமே இருக்கும், அதனை மறுமுனையில் இருப்பவர்கள் அறிந்துகொள்வர்.

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம்: பயங்கரவாதிகள் பயன்படுத்திய ‘டெட் டிராப்’ இ-மெயில்.. வெளியான திடுக் தகவல்!!

டெல்லி குண்டுவெடிப்பு

Updated On: 

16 Nov 2025 08:29 AM

 IST

டெல்லி, நவம்பர் 16: நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து போலீசார், என்ஐஏ (NIA) அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விவகாரம் குறித்து நாள்தோறும் அதிர்ச்சியளிக்கும் வகையில், அடுத்தடுத்து புதிய தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக டெல்லியை தொடர்ந்து, 4 நகரங்களில் சீரியல் பிளாஸ்ட் நடத்த திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் வெளிவந்தது. அந்தவகையில், இந்த குண்டுவெடிப்பு சம்​பவத்​தில் ஈடு​பட்ட பயங்கரவாத கும்​பலைச் சேர்ந்த அனை​வரும் தங்​களுக்​குள் ஒரு​வரை ஒரு​வர் தொடர்​பு​கொள்ள ஒரே முகவரி கொண்ட டெட் டிராப் (Dead-Drop) மெ​யில்​களை பயன்​படுத்​தி​யுள்​ளதாக என்ஐஏ அதி​காரி​கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க : டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம்: சிக்கும் மருத்துவர்கள்.. வெளியான பகீர் தகவல்!!

மருத்துவர் உமர் டின்ஏ மூலம் உறுதி:

கடந்த நவம்பர் 10ஆம் தேதி டெல்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில், 13 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதலாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை இயக்கியது மருத்துவர் உமர்தான் எனவும் டிஎன்ஏ பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதாவது, கார் வெடித்து சிதைந்த நிலையில் கிடைத்த உடல் பாகங்கள் உமர் நபியின் தாயின் டிஎன்ஏவுடன் பொருந்தியதால், அது உமர் நபியின் அடையாளம் உறுதிசெய்யப்பட்டது. குண்டுவெடிப்பின் போது காரின் ஸ்டீயரிங் மற்றும் ஆக்சலேட்டர் இடையே உமரின் கால் சிக்கியிருந்தது. இந்த நிலையில் அவர் காரை ஓட்டிக் கொண்டிருந்ததை உறுதியானது. இந்த பயங்கரவாத குழு 32 வாகனங்களில் வெடிபொருட்களை நிரப்பி, ஒரே நேரத்தில் பல இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பயங்கரவாதிகள் பயன்படுத்திய டெட் டிராப் இ-மெயில்:

இந்நிலையில்,  இந்த சம்​பவத்​தில் ஈடு​பட்ட தீவிர​வாத கும்​பலைச் சேர்ந்த அனை​வரும் தங்​களுக்​குள் ஒரு​வரை ஒரு​வர் தொடர்​பு​கொள்ள ஒரே முகவரி கொண்ட டெட் டிராப் (Dead-Drop) மெ​யில்​களை பயன்​படுத்​தி​யுள்​ளதாக என்ஐஏ அதி​காரி​கள் தெரிவிக்​கின்​றனர். ஒரே முகவரி கொண்ட இ-மெ​யிலை பயங்கரவாதக் குழு​வினர் பயன்​படுத்​து​வர். அந்த இமெ​யில் முகவரி, பாஸ்​வேர்ட் விவரங்​களை பயங்கரவாத குழு​வைச் சேர்ந்த அனை​வரும் அறிந்து வைத்​திருப்​பர். தகவல்​களை பரி​மாறிக் கொள்ள அந்த இமெயி​லில் டைப் செய்​து​விட்டு மெயிலை அனுப்​பாமல் அதை அப்​படியே குளோஸ் செய்​து​விடு​வர்.

இந்த விவரங்​களை தீவிர​வாதக் குழு​வில் உள்ள மற்ற தீவிர​வா​தி​கள் ஓப்​பன் செய்து பார்த்​து​விட்டு, விவரங்​களைப் பெற்​றுக் கொள்​வர். மேலும் அதில் கூடு​தல் தகவல்​களைப் பதிவு செய்​ய​வேண்​டுமென்​றாலும் டைப் செய்​து​விட்டு அப்படியே விட்​டு​விடு​வர். தீவிர​வாதக் குழு​வினர் பயன்​படுத்​தும் இதை டெட் டிராப் (Dead-Drop) இமெ​யில் என அழைக்​கின்​றனர்.

டிஜிட்டல் தடயம் ஏற்படாது:

எந்தவொரு இ-மெயிலும் சர்வரிலிருந்து வெளியேறாததால், வழக்கமான அனுப்பப்பட்ட அல்லது பெறப்பட்ட மெட்டாடேட்டா வடிவத்தில் எந்த டிஜிட்டல் தடயத்தையும் (digital footprint) இவை ஏற்படுத்தாது எனக் கூறப்படுகிறது. அதாவது, உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் டிராப்ட்டாக (drafts) மட்டுமே இருக்கும், அதனை மறுமுனையில் இருப்பவர்கள் அறிந்துகொள்வர்.

இதையும் படிக்க: ‘டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் பயங்கரவாத தாக்குதல் தான்’.. மத்திய அரசு அறிவிப்பு!

இதன் மூலம், பல்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் குழுக்களாக பிரிந்திருந்தாலும், தெளிவான நெட்வொர்க்கில் கலவையாய் இருந்துள்ளனர். அதோடு, அவர்களின் தகவல் பரிமாற்றம் தடையில்லாமல் நடை பெற்றதும் தெரியவந்துள்ளது.