இருமல் மருந்தால் 2 குழந்தைகள் பலி.. சோதனை செய்த மருத்துவருக்கு நேர்ந்த சோகம்.. நடந்தது என்ன?
Rajasthan Cough Syrup : ராஜஸ்தான் மாநிலத்தில் இருமல் மருந்து குடித்த 2 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மருந்து பாதுகாப்பனதா என்பதை நிரூபிக்க அந்த மருந்தை குடித்த மருத்துவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, 22 மருந்துகளின் விற்பனைக்கு ராஜஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.

ராஜஸ்தான், அக்டோபர் 02 : ராஜஸ்தான் மாநிலத்தில் இருமல் மருந்து குடித்த 2 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த மருந்து பாதுகாப்பானது என்பதை நிரூபிக்க அதை குடித்த மருத்துவருக்கு மயக்கம் ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டெக்ஸ்ட்ரோமெத்தோர்பன் ஹைட்ரோபுரோமைடு என்ற இருமல் மருந்தை கேசன் பார்மா என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த மருந்தை சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் நிதிஷ் குடித்துள்ளார். இருமல் மற்றும் சளி காரணமாக கடந்த ஞாயிற்று கிழமை அந்த மருந்தை பெற்றோர் கொடுத்தனர். மருத்துவர்களின் பரிந்துரை அடிப்படையிலேயே சிறுவன் குடித்துள்ளார்.
சிறுவன் நிதிஷ்க்கு அதிகாலை 3 மணியளவில் இருமல் ஏற்பட்டு உள்ளது. அதன்பிறகு தண்ணீர் குடித்துவிட்டு சிறுவன் தூங்கி உள்ளார். அதன்பிறகு சிறுவன் நீண்ட நேரமாகியும் எழுந்திருக்கவில்லை. காலையில் சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால் சிறுவனை பரிசோதனை மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதே மருந்தை குடித்த 2 வயது குழந்தையும் 2025 செப்டம்பர் 22ஆம் தேதி உயிரிழந்தது. இதே போல தான், 2025 செப்டம்பர் 24ஆம் தேதி இதே மருந்தை குடித்த மற்றொரு 3 வயது சிறுவன் ககன் குமாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
Also Read : அனைவரும் தைரியம் மற்றும் தெய்வ பக்தி கொண்டிருக்க வேண்டும்.. விஜயதசமிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர்!




இருமல் மருந்தால் 2 குழந்தைகள் பலி
இருமல் மருந்தால் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் மருந்தை பரிந்துரைத்த மருத்துவர் தாராசந்த் யோகியிடம் கேட்டுள்ளார். அப்போது, இந்த மருந்து பாதுகாப்பனது எனக் கூறிய தாராசாந்த், அதை நிரூபிக்க அந்த மருந்தை அவர் குடித்துள்ளார். பின்னர், மருத்துவர் சிறிது நேரத்திலேயே மயக்க மடைந்துள்ளார்.
Also Read : பொறியியல் அதிசயம்.. லடாக்கில் 19,000 அடி உயரத்தில் மிக உயரமான சாலை.. BROவின் சாதனை!
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, ராஜஸ்தான் அரசு 22 மருந்துகளுக்கு தடை விதித்துள்ளது. இந்த சிரப்பால் கடந்த வாரத்தில் ஒன்று முதல் ஐந்து வயது வரை குழந்தைகள் 8 பேர் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. . ஜூலை மாதத்திலிருந்து நோயாளிகளுக்கு 1.33 லட்சம் பாட்டில்கள் சிரப் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும், ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனையில் 8,200 மருந்து பாட்டில்கள் கையிருப்பில் இருப்பதாகவும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.