காதல் தொல்லை கொடுத்த இளைஞர்.. கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

Student Killed Herself Over Love Torture | பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளம் பெண் ஒருவர் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில், தன்னுடன் படிக்கும் சக மாணவர் அவருக்கு தொடர் காதல் தொல்லை கொடுத்து வந்ததால் அந்த பெண் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

காதல் தொல்லை கொடுத்த இளைஞர்.. கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

மாதிரி புகைப்படம்

Updated On: 

20 Oct 2025 08:09 AM

 IST

பெங்களூரு, அக்டோபர் 20 : பெங்களூரில் (Bengaluru) கல்லூரி மாணவி ஒருவர் இளைஞரின் காதல் தொல்லை தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில், அவருடன் படிக்கும் மாணவர் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாத மாணவி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இந்த நிலையில், காதல் தொல்லையால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துக்கொண்ட விவகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இளைஞரின் காதல் தொல்லையால் கல்லூரி மாணவி தற்கொலை

கர்நாடகா மாநிலம், பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சனா பர்வீன் என்ற 19 வயது இளம் பெண் ஒருவர் விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் ரியாஸ் என்ற மாணவரும் படித்து வருகிறார். இந்த நிலையில், ஒரே கல்லூரி என்பதால் அந்த இளைஞருடன் சனா பர்வீன் நட்பாக பழகி வந்துள்ளார். ஆனால் ரியாஸ், சனா பர்வீனை அப்படி பார்க்கவில்லை என்றும் அவர் அந்த இளம் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஒரே மேடையில் இரண்டு பெண்களை காதல் திருமணம் செய்த இளைஞர்!

கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட இளம் பெண்

அந்த இளைஞர் சனா பர்வீனை ஒருதலையாக காதலித்து வந்தது மட்டுமன்றி, அவர் இளம் பெண்ணுக்கு தொடர் காதல் தொல்லையும் கொடுத்து வந்துள்ளார். அது தொடர்பாக அவரிடம் அடிக்கடி தகராறும் செய்து வந்துள்ளார். அந்த இளைஞர் மனம் மாறிவிடுவார் என்ற நம்பிக்கையில் சனா பர்வீன் இருந்துள்ளார். ஆனால், அந்த இளைஞர் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த சனா, தான் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : நாடாளுமன்றத்திற்கு அருகே எம்பி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – பரபரப்பு சம்பவம்

இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இளம் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.