Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மன அழுத்தத்தை போக்க மாந்திரீக பூஜை.. வளர்ப்பு நாயை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிய பெண்!

Bengaluru Woman Kills Pet Dog | பெங்களூரில் மாந்திரீகத்திற்காக பெண் ஒருவர் வளர்ப்பு நாயை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில், சோதனை செய்த போலீசார் துண்டு துண்டாக வெட்டி சாக்கு பையில் வைக்கப்பட்டிருந்த நாயின் உடலை கைப்பற்றினர்.

மன அழுத்தத்தை போக்க மாந்திரீக பூஜை.. வளர்ப்பு நாயை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிய பெண்!
வளர்ப்பு நாயை கொன்ற பெண்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 29 Jun 2025 07:25 AM

பெங்களூரு, ஜூன் 29 : பெங்களூரில் (Bengaluru) மன அழுத்தத்தில் இருந்து விடுபட பெண் ஒருவர் தனது வளர்ப்பு நாயை கழுத்தை அருத்து கொலை செய்து, அதன் உடலை துண்டு துண்டாக வெட்டி வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், விசாரணையில் இது அம்பலமாகியுள்ளது. இந்த நிலையில், மாந்திரீகத்திற்காக வளர்ப்பு நாய் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

வளர்ப்பு நாயை கொலை செய்த பெங்களூரு பெண்

கர்நாடக (Karnataka) மாநிலம் பெங்களூரு மகாதேவபுரம் பகுதியை சேர்ந்தவர் 36 வயதான திரிபர்ணா பாயிக். பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றி வரும் இவர், மூன்று நாய்களை வளர்த்து வந்துள்ளார். எனவே ஜூன் 26, 2025 அன்று திரிபர்ணாவின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். பொதுமக்களின் புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் திரிபர்ணாவின் வீட்டை சோதனை செய்துள்ளனர். அப்போது, திரிபர்ணா தனது வளர்ப்பு நாயை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி சாக்கு பையில் வைத்திருந்தது தெரிய வந்தது.

மன அழுத்தத்தை போக்க மாந்திரீக பூஜை செய்த பெண்

மேலும் அந்த அறையில் சில சாமி படங்கள் மற்றும் பூஜை பொருட்களும் இருந்துள்ளன. அது குறித்து போலீசார் நடத்தி விசாரணையில், திரிபர்ணா மாந்திரீகம் செய்ய தனது வளர்ப்பு நாயை கழுத்தை அறுத்து கொலை செய்த உடன் அதன் உடலை துண்டு துண்டாக வெட்டி சாக்கு பையில் மூடி வைத்தது தெரிய வந்துள்ளது. மன அழுத்தத்தில் இருந்து விடுபட அவர் அத்தகைய கொடூர செயலை செய்ததாக கூறப்படுகிறது. இதநிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள திரிபர்ணாவை வலை வீசி தேடி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.