சாலை ஓரம் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையின் சடலம்.. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை!

New Born Baby Body on Road Side | பெங்களூரில் பிறந்து சில மணி நேரங்களே ஆண பெண் குழந்தை ஒன்று சாலை ஓரத்தில் வீசப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலை ஓரம் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையின் சடலம்.. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை!

மாதிரி புகைப்படம்

Updated On: 

03 Nov 2025 10:28 AM

 IST

பெங்களூரு, நவம்பர் 03 : பெங்களூரில் (Bengaluru) பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை (New Born Girl Baby) சாலை ஓரத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைக்கு அருகே உள்ள சாலையில் இருந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அங்கிருந்து தான் குழந்தை வீசப்பட்டிருக்கும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், பச்சிளம் குழந்தை சாலையில் வீசப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாலை ஓரத்தில் கிடந்த பச்சிளம் குழந்தையின் சடலம்

கர்நாடகா (Karnataka) மாநிலம் பெங்களூரு ஊரக மாவட்டம் ஒசகோட்டை பகுதியில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையின் சடலம் சாலை ஓரம் வீசப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் சடலத்தை கண்ட பொதுமக்கள் அது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க : பள்ளியின் 4வது மாடியிலிருந்து குதித்து 9 வயது சிறுமி தற்கொலை… ஜெய்ப்பூரில் பரபரப்பு சம்பவம்

உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார்

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் குழந்தை உயிருடன் சாலை ஓரத்தில் வீசப்பட்டதா அல்லது இறந்து பிறந்த நிலையில், சாலை ஓரத்தில் வீசப்பட்டதா என்பது குறித்து பிரேத பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

இதையும் படிங்க : இரண்டு பச்சிளம் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம்!

மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்களிடம் விசாரணை

குழந்தை சாலையில் விசப்பட்ட அதே பகுதியில் மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த நிலையில், அந்த மருத்துவமனையில் குழந்தை பெற்றவர்கள் யாரேனும் ஒருவர் தான் குழந்தையை சாலையில் வீசி சென்றிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகித்துள்ளனர். இந்த நிலையில், அந்த மருத்துவமனையில் சமீபத்தில் குழந்தை பெற்ற பெண்களிடம் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.