திருமணம் செய்துக்கொள்வதாக கூறி மோசடி.. இளம் பெண்ணிடம் பணம், நகை பறித்த காதலன்!

Young Woman Cheated Over Marriage Promise by Lover | பெங்களூருவை சேர்ந்த இளம் பெண் ஒருவர், ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதாக கூறிய அந்த இளைஞர், அவரிடம் இருந்து நகை, பணம் பறித்துக்கொண்டு மோசடி செய்துள்ளார்.

திருமணம் செய்துக்கொள்வதாக கூறி மோசடி.. இளம் பெண்ணிடம் பணம், நகை பறித்த காதலன்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

21 Oct 2025 08:51 AM

 IST

பெங்களூரு, அக்டோபர் 21 : கர்நாடகா (Karnataka) மாநிலம் பெங்களூருவை (Bengaluru) சேர்ந்த இளம் பெண்ணுக்கும், அப்பிகெரேயை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும் 2019 ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், அந்த பெண்ணை கட்டாயம் திருமணம் செய்துக்கொள்வதாக அந்த இளைஞர் வாக்குறுதி அளித்துள்ளார். அதன் அடிப்படையில், அந்த பெண்ணும் அந்த இளைஞரை முழுமையாக நம்பியுள்ளார்.

காதலனுக்கு அவ்வப்போது பணம் கொடுத்து வந்த இளம் பெண்

தனது காதலன் தன்னை திருமணம் செய்துக்கொள்வார் என்ற நம்பிக்கையில் அந்த இளம் பெண் அந்த இளைஞருக்கு ஓவ்வொரு ஆண்டும் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களை வாங்கி பரிசளித்து வந்துள்ளார். அதுமட்டுமன்றி காதலன் கேட்கும்போதெல்லாம் வீட்டில் இருந்து பெற்றோருக்கு தெரியாமல் அந்த பெண் பணத்தை எடுத்து கொடுத்து வந்துள்ளார். அதன்படி, தொழில் செய்ய போவதாக கூறி இளம் பெண்ணிடம் இருந்து பல லட்சம் பணம் மற்றும் தங்க நகைகளை அந்த பெண்ணிடம் இருந்து அந்த இளைஞர் வாங்கியுள்ளார்.

இதையும் படிங்க : இரட்டை கொலையில் முடிந்த கள்ளக்காதல்.. டெல்லியில் பரபரப்பு சம்பவம்!

திடீரென காதலை முறித்துக்கொண்ட இளைஞர்

திருமணம் செய்துக்கொள்வதாக கூறி இளம் பெண்ணிடம் இருந்து நகை, பணம் வாங்கி வந்த அந்த இளைஞர் திடீரென இளம் பெண் உடனான காதலை முறித்துக்கொள்வதாக கூறியுள்ளார். மேலும், இளம் பெண்ணை திருமணம் செய்துக்கொளவும் அவர் மறுத்துள்ளார். இந்த நிலையில், தான் கொடுத்த பணம் மற்றும் நகையை திருப்பி தரும்படி இளம் பெண் கேட்டுள்ளார். அதற்கு அந்த இளைஞரின் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : காதல் தொல்லை கொடுத்த இளைஞர்.. கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

இதனால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளான இளம் பெண் தனது காதலன், அவரது தாய் மற்றும் சகோதரர் ஆகிய மூவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த 6 ஆண்டுகளாக தன்னை காதலித்து திருமணம் செய்துக்கொள்வதாக கூறி ஏமாற்றி ரூ.25 லட்சம் ரொக்க பணம் ,137 கிராம் தங்க நகைகள் மற்றும் 6 விலை உயர்ந்த செல்போன்கள் என சுமார் ரூ.40 லட்சம் மதிப்பிலான பொருட்களை தன்னிடம் இருந்து அந்த இளைஞர் மோசடி செய்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

இளம் பெண்ணின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.