தாயகம் திரும்பும் சுபான்ஷு சுக்லா.. பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல்..

Shubanshu Shukla To Meet PM Modi: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா நாளை (ஆகஸ்ட் 17, 2025) இந்தியா திரும்புகிறார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தனது அனுபவங்களை பகிர்ந்துக்கொள்வார் என தெரிவிக்கபட்டுள்ளது.

தாயகம் திரும்பும் சுபான்ஷு சுக்லா.. பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல்..

கோப்பு புகைப்படம்

Published: 

16 Aug 2025 18:15 PM

டெல்லி, ஆகஸ்ட் 16, 2025: சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட இந்தியா விண்வெளி வீரர் சுபான்சு சுக்லா நாளை அதாவது ஆகஸ்ட் 17 2025 அன்று தாயகம் திரும்புகிறார் 2027 ஆம் ஆண்டு இஸ்ரோ தனது முதல் மனித விண்வெளி பயணத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில் தனது அனுபவங்களை நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆர்வமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் கடந்த ஒரு வருடமாக ISS-க்கான Axiom-4 பணிக்காக அமெரிக்காவில் பயிற்சி பெற்ற அவர் ஆகஸ்ட் 17 2025 அன்று இந்தியா வந்தடைந்த உடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனை தொடர்ந்து சொந்த ஊரான லக்னோவுக்கு செல்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 2025 ஆகஸ்ட் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளை நடைபெறும் தேசிய விண்வெளி தின கொண்டாட்டங்களில் பங்கேற்க அவர் மீண்டும் டெல்லிக்கு வருகை தருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயகம் திரும்பும் சுபான்ஷு சுக்லா:

இந்நிலையில் விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லா விமானத்தில் அமர்ந்திருக்கும் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், “ இந்தியா திரும்புவதற்காக விமானத்தில் அமர்ந்திருக்கும் போது என் இதயத்தில் ஒரு விதமான உணர்வுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த பயணத்தின் போது கடந்த ஒரு வருடமாக எனது நண்பர்களாகவும் குடும்பத்தினராகவும் இருந்த ஒரு அற்புதமான குழுவினரை விட்டு செல்வது எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஆனால் இந்த பயணத்திற்கு பிறகு முதல்முறையாக எனது நண்பர்கள் குடும்பத்தினர் மற்றும் நாட்டில் உள்ள அனைவரையும் சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க்கை என்றால் இதுதான் போல அனைத்துமே ஒரே நேரத்தில் நடக்கிறது” என கூறியுள்ளார்.

மேலும் படிக்க: மசூதியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. 6 பேர் பலியான சோகம்!

அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறேன் – சுபான்ஷு சுக்லா:


அதேபோல், “ பயணத்தின் போதும் அதற்கு பிறகும் அனைவரிடமிருந்தும் நம்ப முடியாத அன்பையும் ஆதரவையும் பெற்ற பிறகு உங்கள் அனைவருடனும் எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள இந்தியாவுக்கு திரும்பி வர நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். விடை பெறுவது கடினம் ஆனால் நாம் வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற வேண்டும். எனது தளபதி பெக்கி விட்சன் அன்புடன் சொல்வது போல் விண்வெளி பயணத்தில், ஒரே நிலையானது மாற்றம். அது வாழ்க்கைக்கும் பொருந்தும் என்று நான் நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: வரி குறைப்பு முதல் வேலைவாய்ப்பு வரை.. சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட டாப் அறிவிப்புகள்!

செங்கோட்டையில் 79வது சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி இந்திய தனது சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்கி வருவதாகவும் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா ஒரு விண்வெளி பயணத்திலிருந்து நாடு திரும்புவதாகவும் நினைவு கூர்ந்தார். ஜூன் 25 2025 அன்று ப்ளோரிடாவில் புறப்பட்டு ஜூன் 26 2025 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் நிறுத்தப்பட்ட ஆக்ஸியம் 4 விண்வெளி பயணத்தின் ஒரு பகுதியாக சுபான்ஷு சுக்லா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து 2025 ஜூலை 15 அன்று அவர் பூமிக்கு திரும்பினார்.