விமானத்தின் அவசரகால கதவை திறந்த நபர்.. பரபரப்பு சம்பவம்!

Akasa Air Emergency Door Incident | உத்தர பிரதேசத்தில் இருந்து மும்பைக்கு செல்ல தயாரா இருந்த ஆகாசா விமானத்தில் பயணி ஒருவர் அவசரகால கதவை திறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவாகரம் தொடர்பாக அவரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விமானத்தின் அவசரகால கதவை திறந்த நபர்.. பரபரப்பு சம்பவம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

04 Nov 2025 14:25 PM

 IST

லக்னோ, நவம்பர் 04 : உத்தர பிரதேச (UP – Uttar Pradesh) மாநிலம் வாரணாசியில் (Varansai) இருந்து நேற்று (நவம்பர் 03, 2025) மாலை மராட்டியத்தின் மும்பைக்கு ஆகாசா விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்வதற்காக தயாராக இருந்துள்ளனர். விமானம், விமான நிலையத்தில் இருந்து ஓடுபாதை அருகே சென்றுக்கொண்டு இருந்தபோது அந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர், விமானத்தின் அவசரகால கதவை திறந்துள்ளார். இதனால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விமானத்தின் அவசரகால கதவை திறந்த பயணி

பயணி விமானத்தின் அவசரகால கதவை திறந்த நிலையில், அது குறிந்த விமானி உடனடியாக விமானத்தை ஓடுதளத்திற்கு கொண்டுவந்துள்ளார். பிறகு உடனடியாக இந்த சம்பவம் குறித்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், விரைந்து சென்ற அதிகாரிகள் அவசரகால கதவை திறந்த அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க : ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளிவிட்ட சக பயணி.. பகீர் சம்பவம்!

தெரியாமல் கதவை திறந்துவிட்டதாக கூறிய பயணி

அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை நடத்திய நிலையில், தான் தெரியாமல் அந்த கதவை திறந்துவிட்டதாக அந்த நபர் தெரிவித்துள்ளார். விமானத்தின் அவசரகால கதவை திறந்த அந்த நபர், உத்தர பிரதேச மாநிலம் ஜனுபூர் மாவட்டத்தை சேர்ந்த சுஜித் என்பது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த பயணி விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து ஒரு மணி நேரம் கழித்து விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. இதனால் விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பேருந்து விபத்தில் 24 பேர் பலி.. அதீத வேகத்தால் தெலங்கானாவில் சோகம்!

விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் பலர் இவ்வாறு விமானத்தின் அவசரகால கதவை திறப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், விமானத்தில் பயணம் பயணிகளுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். விமானம் ஓடுபாதையில் சென்ற நிலையில், அந்த பயணி எந்த விதமான ஆபத்தும் இல்லாமல் உயிர் தப்பினார். ஒருவேளை நடுவானத்தில் அவர் அவசரகால கதவை திறந்திருந்தால் அது பெரிய ஆபத்தை ஏற்படுத்தியிருக்கும் என பலரும் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.