கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் எண்ணிக்கை குறைவாக உள்ளது.. 807 பெண்கள், குழந்தைகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் டெல்லி போலீஸ் விளக்கம்!
Delhi 807 Girls Abduction Case | தலைநகர் டெல்லியில் ஜனவரி மாதத்தில் வெறும் 15 நாட்களில் மட்டும் சுமார் 807 பெண்கள் கடத்தப்பட்டதாக டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு தகவலை வெளியிட்ட நிலையில், அது குறித்து டெல்லி போலீசார் விளக்கமளித்துள்ளனர்.

மாதிரி புகைப்படம்
புதுடெல்லி, பிப்ரவரி 06 : இந்தியாவின் (India) தலைநகர் டெல்லியில் (Delhi) ஜனவரி 01, 2026 முதல் ஜனவரி 15, 2026 வரையிலான 15 நாட்களில் மட்டும் சுமார் 807 பெண்கள் மற்றும் குழந்தைகளை காணவில்லை. அப்படியென்றால் ஒரு நாளுக்கு 54 பேர் விகிதம் காணாமல் போயுள்ளனர் என டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேச்சு நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து டெல்லி காவல்துறை தற்போது விளக்கமளித்துள்ளது.
807 பேர் காணாமல் போன விவகாரம் – டெல்லி காவல்துறை விளக்கம்
அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த தரவுகள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பாதுகாப்பு தொடர்பான அச்சத்தையும் ஏற்படுத்தியது. இதனால் டெல்லி மக்கள் கடும் அச்சத்தில் இருந்த நிலையில், டெல்லி காவல்துறை இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது. அதாவது, குழந்தைகள் காணாமல் போன விவகாரத்தில் பொதுமக்கள் அச்சமடையவோ, பயப்படவோ வேண்டிய அவசியமில்லை என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : உச்சக்கட்ட கோபத்தில் சூரியன்…இந்தியாவின் செயற்கைகோள்-சிக்னல்கள் பாதிக்க வாய்ப்பு…இஸ்ரோ எச்சரிக்கை!
டெல்லியில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை
இது குறித்து டெல்லி போலீசின் மக்கள் தொடர்பு அதிகாரி சஞ்சய் தியாகி கூறும்போது முந்தின ஆண்டுடன் ஒப்பிடும்போது டெல்லியில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தை ஒப்பிடும்போது 2026-ன் கனவரியில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை குறைந்தே காணப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : ஆன்லைன் விளையாட்டால் நேர்ந்த சோகம்.. 3 சறுமிகள் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம்.. நடந்தது என்ன?
குறிப்பிட்ட கும்பலுக்கு தொடர்பு உள்ளதை போல் தெரியவில்லை – போலீஸ்
குற்ற செயல்களை அறிவிப்பதில் சிறந்த மற்றும் வெளிப்படை தன்மையுடன் செயல்படும் கொள்கையை டெல்லி போலீசார் பின்பற்றி வருகின்றனர். குழந்தைகள் காணாமல் போனது அல்லது கடத்தப்பட்ட சம்பவத்தில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கும்பலுக்கு தொடர்பு இருப்பது போல தோன்றவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். டெல்லியில் சட்டம், ஒழுங்கு ஐசியுவில் உள்ளது, டெல்லி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்களுடைய குழந்தைகளை நீங்களே கவனம் கொண்டு பாதுகாத்திடுங்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்த நிலையில், தற்போது டெல்லி போலீசார் இந்த விளக்கத்தை அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.