பட்டப்பகலில் வங்கியில் புகுந்த கும்பல்.. ரூ.5 கோடி மதிப்பிலான தங்கம் ரூ.4 லட்சம் பணம் கொள்ளை!

Jharkhand Bank Robbery | ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பர்ஹி பகுதியில் பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் வங்கி கிளை உள்ளது. இந்த நிலையில், மதிய உணவு நேரத்தில் இந்த வங்கிக்குள் புகுந்த கும்பல் ஒன்று வங்கியில் இருந்த ரூ.5 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் ரூ.4 லட்சம் பணத்தை கொள்ளையடித்துள்ளது.

பட்டப்பகலில் வங்கியில் புகுந்த கும்பல்.. ரூ.5 கோடி மதிப்பிலான தங்கம் ரூ.4 லட்சம் பணம் கொள்ளை!

கொள்ளையடிக்கப்பட்ட வங்கி

Updated On: 

25 Apr 2026 00:22 AM

 IST

ராஞ்சி, ஏப்ரல் 24 : ஜார்க்கண்ட் (Jharkhand) மாநிலம், ஹசாரிபாக் மாவட்டம், பர்ஹி பகுதியில் பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் வங்கி கிளை உள்ளது. இந்த வங்கியில் இன்று மதியம் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லாதபோது, ஊழியர்கள் அனைவரும் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது அந்த வங்கிக்குள் திடீரென துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் உடன் மர்ம கும்பல் ஒன்று நுழைந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.

பட்டப்பகலில் வங்கியில் புகுந்து கொள்ளை அடித்த கும்பல்

வங்கிக்குள் திடீரென நுழைந்த அந்த கும்பல் தங்களிடம் இருந்த ஆயுதங்களை காட்டி, ஊழியர்களை மிரட்டி உள்ளது. என்ன செய்வது என்று தெரியாமல் ஊழியர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்திருந்த நிலையில், அந்த கும்பல் வங்கியில் இருந்த சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான 3 கிலோ தங்கம் மற்றும் ரூ.4 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதையும் படிங்க : வாக்குப்பதிவு இடத்துக்கு விசிட் அடித்த யானை.. ஷாக்கான வாக்காளர்கள்… மேற்கு வங்கத்தில் சம்பவம்!

கொள்ளை கும்பலை வலைவீசி தேடி வரும் காவல்துறை

அந்த கொள்ளை கும்பல் கொள்ளை அடித்து சென்ற பிறகு வங்கி ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வங்கியில் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் ரூ.4 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து என்ற கும்பலை வங்கியில் இருந்து கைப்பற்றி சிசிடிவி காட்சிகள் மூலம் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க : மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல்.. முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

பட்டப்பகலில் வங்கிக்குள் புகுந்து கொள்ளை கும்பல் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us
சீனாவிலிருந்து ஈரானுக்கு சென்ற கப்பல் பறிமுதல்: ஏவுகணை இரசாயனங்கள் குறித்த அதிர்ச்சி குற்றச்சாட்டு!
படத்தை மிஞ்சும் நிஜ சம்பவம்.. நோயாளிக்கு சிகிச்சை அளித்த பாதுகாப்பு காவலர்..
ஹைதராபாத் குறித்து பெண் பகிர்ந்த அனுபவம்.. இணையத்தில் வைரல்.
ஹைதராபாதில் வினோத சம்பவம்.. காக்கை விலைக்கு வாங்கிய நிகழ்வு..