ஜிம்மில் திடீர் மாரடைப்பு.. சுருண்ட விழுந்து உயிரிழந்த நபர்.. அதிர்ச்சி வீடியோ
Pune Heart Attack : மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 37 வயதான நபர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த நபர், திடீரென மயக்கமடைந்து உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது சம்பந்தமான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உயிரிழந்த நபர்
புனே, ஆகஸ்ட் 02 : மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 37 வயதான நபர் மாரடைப்பால் உயிரிழந்த (Heart Attack) சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்த உயிரிழந்துள்ளார். இது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி உள்ளது. அண்மைக் காலங்களில் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மாரடைப்பால் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக, கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு, மாரடைப்பால் உயிரிழந்து வருகின்றனர். இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே மாரடைப்புக்கு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆரோக்கியமற்ற உணவுகள், மன அழுத்தம் போன்ற காரணங்களால் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பதாக மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
மாரடைப்பால் உயிரிழந்த நபர்
இருப்பினும், இதற்கு உறுதியான காரணங்கள் எதுவும் தெரியவில்லை. இந்த நிலையில், தற்போது ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அதாவது, ஜிம் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த 37 வயதான நபர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். புனேவின் சின்ச்வாட் பகுதியில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த ஜிம்மில் மிலிந்த் குல்கர்னி என்ற 37 வயதான நபர் கடந்த ஆறு மாதங்களாக காலையில் ஜிம்மிற்கு சென்று வந்தார்.
Also Read : சிறுவன் கடத்தப்பட்டு கொலை.. ரூ.5 லட்சம் தராததால் ஆத்திரம்.. அதிர்ந்த பெங்களூரு!
இந்த நிலையில், வழக்கம்போல் அவர் ஜிம்மிற்கு வந்திருக்கிறார். அப்போது, தீவிர உடற்பயிற்சியில் மேற்கொண்டிருந்தார். அப்போது, சிறிது நேரம் கழித்து, அவர் தண்ணீர் குடித்திருந்தார். இதனை அடுத்து, திடீரென அவர் மயக்கமடைந்துள்ளார். இதனை அடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
அதிர்ச்சி வீடியோ
Collapsed and Died in the gym.
Pune: Milind Kulkarni (37) Faints After Workout Session In Pune Gym, Dies. pic.twitter.com/7HdkMOih15
— زماں (@Delhiite_) August 2, 2025
இந்த சம்பவத்தை காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், “சின்ச்வாட்டில் உள்ள நைட்ரோ ஜிம்மில் 37 வயது நபர் திடீரென இறந்தார். இந்த சம்பவம் காலை 7 மணியளவில் நடந்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மிலிந்த் மாரடைப்பால் இறந்திருக்கலாம்” என கூறினர்.
Also Read ; ஹைதராபாத் அதிர்ச்சி! 40 வயது ஆண் 8ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த கொடூரம்.. 5 பேர் கைது!
தொழிலதிபரான மிலிந்த் குல்கர்னி, புனேவில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். அவர் மருத்துவர். குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்களின்படி, மிலிந்தின் குடும்பத்தில் ஏற்கனவே சிலர் மாரடைப்பால் உயிரழந்திருக்கின்றனர். அவரது தந்தை மற்றும் சகோதரர் இருவரும் மாரடைப்பால் இறந்ததாக சொல்லப்படுகிறது. எனவே, மிலிந்தும் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம். இருப்பினும், பிரேத பரிசோதனைக்கு பிறகே உறுதியான தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.