பீகார் தேர்தல் ஒரு கண்ணோட்டம்…எதிர்கட்சி அந்தஸ்தை பெறாத கட்சி…தனிப்பெரும்பான்மை பெற்ற தேஜகூட்டணி!
Bihar Elections At A Glance: 2025-இல் பீகாரில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடிய கட்சி குறித்தும், எதிர்க்கட்சி அந்தஸ்தை தவற விட்ட கட்சிகள் குறித்தும், அதற்கான காரணம் குறித்தும் இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .

பீகார் தேர்தல் ஒரு கண்ணோட்டம்
2025- ஆம் ஆண்டில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தல் மிகப்பெரிய வரலாற்றை பதிவை செய்துள்ளது. பீகாரில் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பல ஆண்டுகளுக்கு பிறகு சுமார் 67 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில், ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிக அளவில் வாக்குகளை செலுத்தி இருந்தனர். இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் அடங்கிய மகாகட்பந்தன் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
படு சூடான பீகார் தேர்தல் களம்
இதில், தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் தேர்தலில் குதித்ததால் இந்த தேர்தல் களம் படு சூடானது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தலா 101 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், லோக் ஜன்சக்தி 29 தொகுதிகளில் களமிறங்கியது. இதேபோல, மகாகட்பந்தன் கூட்டணியில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் 143 மற்றும் காங்கிரஸ் 63 தொகுதிகளில் களம் கண்டன.
மேலும் படிக்க: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியா வருகை? எப்போது தெரியுமா!
தனிப்பெரும்பான்மையை பதிவு செய்த தேஜகூட்டணி
இதில் தேசிய ஜனநாயக கூட்டணி 243 தொகுதிகளுக்கு 202 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப் பெரிய வரலாற்றை பதிவு செய்தது. இதில் பாஜக 89, ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளில் மட்டுமே தனது வெற்றியை பதிவு செய்ய முடிந்தது. அதாவது மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளை கூட மகாகட்பந்தன் கூட்டணி கைப்பற்ற முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது. இதனால், மகாகட்பந்தன் கூட்டணி கட்சிகளுக்கு எதிர்க் கட்சி அந்தஸ்து கூட கிடைக்காமல் கை நழுவி போனது.
எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்காமல் போன நிலை
இதில், குறிப்பாக கடந்த 2020 சட்டமன்ற தேர்தலில் 75 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவான ஐக்கிய ஜனதா தளம் இந்த தேர்தலில் அதில் பாதி தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் போனது கவனிக்கத்தக்க விஷயமாகும். இது, நிதீஷ் குமார் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இதில், பாஜக தனிப்பெரும்பான்மையாக 89 தொகுதிகளை தன் வசம் கொண்டு வந்துள்ளது. இது, ஆண்டாண்டு காலமாக முதல்வர் பதவி வகித்து வரும் நிதீஷ் குமாரின் சொந்த மாநிலத்தில் பாஜக பெற்றது முக்கிய வரலாற்று பதிவாகவும் பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க:மக்களவையில் வந்தே மாதரம் குறித்துப் பேசிய பிரதமர் மோடி