Health Tips: மாலையில் ஸ்நாக்ஸ் பிடிக்குமா..? இந்த உணவுகள் மட்டும் வேண்டாம்.. ஆரோக்கியத்தை கெடுக்கும்!
Snacks To Avoid Evening: மாலை 6 மணிக்கு மேல் சமோசா, ஜிலேபி, பானிபூரி, காளான், வறுத்த மோமோஸ் மற்றும் அதிகபடியான ஸ்வீட்ஸ் போன்ற உணவுகளைத் தவிர்க்குமாறு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். இது தவிர, பர்கர்கள் மற்றும் நிறைய வெண்ணெய் சேர்த்த பீட்சா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

மாலை நேர ஸ்நாக்ஸ்
பொதுவாகவே, மதிய நேர உணவுக்கு பிறகும் இரவு நேரத்திற்கு முன்பாகவும் மாலை நேரத்தில் ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். மாலையில் ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற வெறி ஏற்படுவது மிகவும் இயல்பானது. கோடை காலத்தை காட்டிலும் மழைக்காலம் மற்றும் குளிர்காலத்தில் (Winter) குளிரில் இருந்து தப்பிக்க பலரும் மாலை நேரத்தில் சூடாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். ஆனால், இந்த நேரத்தில், வறுத்த மற்றும் அதிக இனிப்பு உணவுகள் மிகவும் தீங்கு விளைவிக்கும். சுவையைத் தேடி, செரிமான அமைப்பையும் வளர்சிதை மாற்றத்தையும் கெடுக்கும் பொருட்களை நாம் சாப்பிடுகிறோம். இது ஆரோக்கியத்தை பாதிக்க செய்யும். அந்தவகையில், மாலை 6 மணிக்கு மேல் சாப்பிடக்கூடாத உணவுகளை (Evening Snacks) பற்றி தெரிந்து கொள்வோம்.
ALSO READ: சர்க்கரை நோய்க்கு பயம் கொடுக்கும்.. இந்த 4 உணவு பொருட்கள் போதும்!
மாலை 6 மணிக்கு மேல் என்ன ஸ்நாக்ஸ் சாப்பிடக்கூடாது..?
மாலை 6 மணிக்கு மேல் சமோசா, ஜிலேபி, பானிபூரி, காளான், வறுத்த மோமோஸ் மற்றும் அதிகபடியான ஸ்வீட்ஸ் போன்ற உணவுகளைத் தவிர்க்குமாறு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். இது தவிர, பர்கர்கள் மற்றும் நிறைய வெண்ணெய் சேர்த்த பீட்சா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தொடர்ந்து, இப்படியான உணவுகளை எடுத்து கொள்ளும் இந்தப் பழக்கம் உடலில் அதிக கலோரிகள், கொழுப்பு மற்றும் சர்க்கரையைச் சேர்க்கிறது. இது எடை அதிகரிப்பு, வாயு, அமிலத்தன்மை மற்றும் இரத்த சர்க்கரையை நேரடியாக பாதிக்கிறது. ப்ரைடு உணவுகளுக்கும் வகை 2 சர்க்கரை நோய்க்கும் நேரடி தொடர்பு உள்ளது. வறுத்த உணவுகளை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு இரத்த சர்க்கரை கட்டுப்பாடு குறைவாக இருக்கும் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
ப்ரைடு உணவுகள்:
ப்ரைடு உணவுகள் குடல் ஆரோக்கியத்தை மோசமாக்குகின்றன என்பதையும் இந்த ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. நல்ல பாக்டீரியாக்கள் குறைந்து வீக்கம் அதிகரிக்கிறது. பசியையும் இரத்த சர்க்கரையையும் கட்டுப்படுத்தும் அத்தியாவசிய ஹார்மோன்களின் அளவும் குறையக்கூடும்.
ALSO READ: சிறுநீரக கற்கள் மீண்டும் வருமோ என்ற பயமா..? வராமல் தடுக்க செய்ய வேண்டியவை..!
மாலை 6 மணிக்குப் பிறகு உணவுமுறை எப்படி இருக்க வேண்டும்?
மாலையில் லேசான மற்றும் சத்தான உணவுகளை சாப்பிடுவது சிறந்தது. ப்ரைடு ஸ்நாக்ஸூக்கு பதிலாக, வயிற்றை அமைதிப்படுத்தும் மற்றும் இரவில் வாயுவை அதிகரிக்காத உணவுகளை தேர்ந்தெடுப்பது நல்லது. மாலையில் வேகவைத்த கோதுமை மோமோஸ், மசாலா சுண்டல், வேகவைத்த சோளம், எண்ணெய் இல்லாமல் பனீர் டிக்கா, காய்கறி சூப், அத்தோ மற்றும் வறுத்த மக்கானா ஆகியவை ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்களை எடுத்து கொள்ளலாம். இதுமாதிரியான சரியான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை மாலை நேர ஸ்நாக்ஸ் எடுத்து கொள்வது, உங்கள் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.