Health Tips: குளிர்கால சுவாச பிரச்சனையா..? ஆரோக்கியத்தை பராமரிக்க எளிய குறிப்புகள்!
Breathing Problem in Winter: ப்ரஸான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில், இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் என்று கருதப்படுகிறது. இவற்றை உட்கொள்வது சளி மற்றும் இருமல் போன்ற உடல்நலப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.

சுவாச பிரச்சனை
குளிர்காலத்தில் (Winter) சுவாசப் பிரச்சனைகள் பொதுவானதாகிவிடும். சுவாச நோய்களால் பலர் அவதிப்படுகிறார்கள். இந்த பருவத்தில், டெல்லி-என்.சி.ஆர் உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமாகியுள்ளது. காற்று மாசுபாடு மற்றும் குளிர்ந்த காற்று ஆஸ்துமா நோயாளிகளுக்கு நிறைய பிரச்சனைகளை உருவாக்குகிறது. காற்றில் இருக்கும் தூசி, புகை மற்றும் மாசு துகள்கள் சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகின்றன. குளிர்ந்த காற்று நுரையீரலின் குழாய்களை சுருங்கச் செய்கிறது. இது மூச்சுத் திணறல், இருமல் மற்றும் சளி உருவாக்கம் போன்ற பிரச்சனைகளை அதிகரிக்கிறது. அந்தவகையில், இந்த 5 விஷயங்களை மேற்கொள்வதன் மூலம் ஆஸ்துமாவை (Asthma) தவிர்த்து ஆரோக்கியமாக எப்படி இருக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: குளிரில் கை விரல்களும் கால்விரல்களும் வீங்குகின்றதா? சரிசெய்யும் எளிய சூப்பர் டிப்ஸ்!
குளிர்காலத்தில் சுவாசப் பிரச்சனை ஏன் ஏற்படுகிறது..?
பழங்கள் மற்றும் காய்கறிகள்:
ப்ரஸான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில், இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் என்று கருதப்படுகிறது. இவற்றை உட்கொள்வது சளி மற்றும் இருமல் போன்ற உடல்நலப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. உங்கள் உணவில் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி சளி மற்றும் இருமல் போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
குளிர்ந்த நீரை தவிர்த்தல்:
குளிர்ந்த நீரை குடிப்பது சளி மற்றும் இருமலை மேலும் அதிகரிக்க செய்யும். அதன்படி, நீரை கொதிக்க வைத்து குடிப்பது சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் தரும். குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க இது ஒரு எளிய வழி.
உடற்பயிற்சி செய்தல்:
ஆஸ்துமா மற்றும் பிற சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் தங்கள் அன்றாட வழக்கத்தில் உடற்பயிற்சியை மேற்கொள்வது நல்லது. ஆனால், குளிர்காலத்தில் வெளிப்புற உடற்பயிற்சியைத் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை குளிரில் வெளியே செல்வதை தடுப்பது நல்லது. வழக்கமான உடற்பயிற்சி உங்கள் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. சரியான உடற்பயிற்சி இதய செயல்பாட்டை மேம்படுத்தி சுவாசத்தை எளிதாக்கும்.
அடர்த்தியான ஆடைகளை அணிதல்:
குளிர்காலத்தில் சுவாசப் பிரச்சினைகளைத் தடுக்க அடர்த்தியான ஆடைகளை அணிவது அவசியம். அடர்த்தியான ஆடைகளை அணிவதும், மாஸ்க் அல்லது மஃப்ளரைப் பயன்படுத்துவதும் குளிர்காலத்தில் சுவாசப் பிரச்சினைகளைக் குறைக்க உதவும்.
ALSO READ: பலருக்கு தொல்லை தரும் ஒற்றை தலைவலி.. குளிர்காலத்தில் இது ஏன் அதிகரிக்கிறது..?
சுவாச பிரச்சனைகளைத் தடுத்தல்:
சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் புகைப்பது ஆஸ்துமா மற்றும் நீண்ட நாட்கள் உள்ள மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாசப் பிரச்சினைகளை மோசமாக்கும். எனவே, புகைபிடிப்பதைத் தவிர்ப்பது மற்றும் புகைப்பிடிப்பவர்களின் அருகில் இருப்பதைத் தவிர்ப்பது முக்கியம்.