Winter Health Tips: பலருக்கு தொல்லை தரும் ஒற்றை தலைவலி.. குளிர்காலத்தில் இது ஏன் அதிகரிக்கிறது..?
Migraines Problems: குளிர்கால மாதங்களில், வீட்டிற்குள் இருக்கும்போது நாம் அதிகமாக காஃபின் கலந்த பானங்களை எடுத்து கொள்கிறோம். மேலும், குளிர்காலத்தில் குறைவான தண்ணீரையும் குடிக்கிறோம். இது உடலில் நீரிழப்புக்கு வழிவகுத்து, ஒற்றைத் தலைவலியை மோசமாக்குகிறது. அதன்படி, தாகம் இல்லாவிட்டாலும் தண்ணீர் குடிப்பது முக்கியம்.
ஒற்றை தலைவலி (Migraines) என்பது குமட்டல், ஒளி உணர்திறன் தலைவலி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும் ஒரு கடுமையான தலைவலியாகும். இந்த தலைவலி பொதுவாக ஆண்களை விட பெண்களில் அதிகம் ஏற்படுகிறது. ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் ஒற்றை தலைவலியை பாதிக்கிறது. இந்த ஹார்மோன் ஏற்ற இறக்கமாக இருக்கும்போது, ஒற்றை தலைவலி ஏற்படலாம். அந்தவகையில், ஒற்றைத் தலைவலி எவ்வளவு வேதனையானது என்பதைப் புரிந்துகொள்வது கடினம். குளிர்காலத்தில் (Winter) ஒற்றைத் தலைவலி மிகவும் கடுமையானது என்று பலர் கூறுகின்றனர். இப்படியான சூழ்நிலையில், குளிர்காலத்தில் ஒற்றைத் தலைவலி ஏன் அதிகமாகிறது? இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
வெப்பநிலை குறையும்போது, உச்சந்தலையிலும் கழுத்திலும் உள்ள இரத்த நாளங்கள் வேகமாக சுருங்கத் தொடங்குகின்றன. இது முக்கோண நரம்பில் பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக கடுமையான வலி ஏற்படுகிறது. ஒற்றைத் தலைவலி உள்ளவர்களுக்கு திடீரென குளிர்ந்த காற்று வீசினாலும் தலைவலி ஏற்படலாம். வெப்பத்திலிருந்து குளிருக்கும், மீண்டும் குளிரில் இருந்து வெப்பத்திற்கும் செல்வது கூட இரத்த நாள அமைப்பைப் பாதிக்கும். குளிர்காலத்தில் வீட்டிலேயே இருப்பது உடல் செயல்பாடுகளைக் குறைக்கும். இது வலியை மோசமாக்கும்.
ALSO READ: ஸ்மார்ட்போனை இரவும் பகலும் அதிகமாக பயன்படுத்துகிறீர்களா? எச்சரிக்கை! இவ்வளவு பிரச்சனையை தரும்!




உடல் சூரிய ஒளியில் படும்போது, செரோடோனின் அளவு சாதாரணமாக இருக்கும். இது மனநிலையை உற்சாகமாக வைத்து வலி மற்றும் துன்பம் ஆகியவற்றை விரட்டும். மேலும் தூக்கம் விரைவாக வருகிறது. ஆனால் குளிர்காலத்தில், உடல் குறைவான சூரிய ஒளியை பெறுகிறது. இதன் விளைவாக, ஒற்றைத் தலைவலியின் வலி அதிகமாக உணரப்படுகிறது.
சூரிய ஒளி:
சூரிய ஒளியில் உடலில் குறைவாக படும்போது உடலில் இயற்கையான வைட்டமின் டி உற்பத்தியைக் குறைப்பதாகும். மேலும், பகல் நேரம் குறைவாக இருப்பதால், தூக்க சுழற்சியும் பாதிக்கப்படுகிறது. இது ஒற்றைத் தலைவலி வலியை மேலும் கடுமையானதாக்குகிறது. வானிலை மாற்றங்களும் வளிமண்டல அழுத்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள் இதற்கு உணர்திறன் உடையவர்கள் ஆகும். வளிமண்டல அழுத்தம் குறையும் போது, சைனஸ்கள் போன்ற காற்று நிரப்பப்பட்ட இடங்களின் சமநிலை சீர்குலைந்து, நரம்புகளுக்கு பதற்றம் பரவுகிறது. இரத்த நாளங்களில் ஏற்படும் சிறிய மாற்றங்களுடன் கூட இது நிகழலாம்.
குளிர்கால மாதங்களில், வீட்டிற்குள் இருக்கும்போது நாம் அதிகமாக காஃபின் கலந்த பானங்களை எடுத்து கொள்கிறோம். மேலும், குளிர்காலத்தில் குறைவான தண்ணீரையும் குடிக்கிறோம். இது உடலில் நீரிழப்புக்கு வழிவகுத்து, ஒற்றைத் தலைவலியை மோசமாக்குகிறது. வீட்டில் உட்கார்ந்திருக்கும்போது டிவியை வெறித்துப் பார்ப்பதையோ அல்லது ஸ்மார்ட் போனை வெறித்துப் பார்ப்பதையோ அதிக நேரம் செலவிடுகிறோம். இது கண்களில் அழுத்தத்தை ஏற்படுத்தி ஒற்றைத் தலைவலியை அதிகரிக்கிறது.
ALSO READ: தலைவலியில் இத்தனை வகைகளா..? மன அழுத்தமும் தலையில் வலியை கொடுக்குமா?
எனவே, குளிர்காலத்தில் ஒற்றைத் தலைவலியைத் தவிர்க்க, உங்கள் தலை, கழுத்து மற்றும் காதுகளை சூடாக வைத்திருக்கும் அடர்த்தியான ஆடைகளை அணிய வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். தாகம் இல்லாவிட்டாலும் தண்ணீர் குடிப்பது முக்கியம். எவ்வளவு பணி சுமை இருந்தாலும் தூக்கத்தில் சமரசம் செய்யாமல், 8 மணிநேரம் தூக்கத்தை பெறுவது முக்கியம். சரியான நேரத்தில் சாப்பிடுவதும் முக்கியம். மேலும், சிறிது நேரம் சூரிய ஒளியில் உடலை காண்பிப்பதும் நல்லது.