Health Tips: உடலில் இரும்புச்சத்து குறைவா..? சரி செய்ய உதவும் சைவ உணவுகள்!

Blood Flow Increase Foods: இரும்புச்சத்து குறைபாட்டை பூர்த்தி செய்ய ரெட் மீட், பீன்ஸ் மற்றும் கடல் உணவுகளை எடுத்து கொள்ளலாம். அதுவே, சைவ உணவு உண்பவர்களாக இருந்தால் இரும்புச்சத்து குறைபாட்டை பூர்த்தி செய்ய என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

Health Tips: உடலில் இரும்புச்சத்து குறைவா..? சரி செய்ய உதவும் சைவ உணவுகள்!

இரும்புச்சத்து உணவுகள்

Published: 

10 Oct 2025 19:52 PM

 IST

ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்க அனைவரும் சரியான உணவை எடுத்துகொள்வது முக்கியம். இதனுடன், உடலில் இரத்த அளவை சரியாக பராமரிப்பதும் மிகவும் முக்கியம். அதேபோல், நம் உடலில் இரும்புச்சத்து (Iron Content) குறைபாடு இருந்தால், இரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் சோர்வு, பலவீனம், சருமம் மஞ்சள் நிறமாக மாறுதல், தலைச்சுற்றல் (Dizziness) மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற பல பிரச்சனைகள் நம் உடலில் தொடங்குகின்றன. இதற்காக, சரியான உணவுடன் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டியது அவசியம். இன்று, உடலில் இரத்த அளவை அதிகரிக்க, எது மாதிரியான உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

இரும்புச்சத்து குறைபாட்டை பூர்த்தி செய்ய ரெட் மீட், பீன்ஸ் மற்றும் கடல் உணவுகளை எடுத்து கொள்ளலாம். அதுவே, சைவ உணவு உண்பவர்களாக இருந்தால் இரும்புச்சத்து குறைபாட்டை பூர்த்தி செய்ய என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. அந்தவகையில், நீங்களும் ஒரு சைவ உணவு உண்பவராக இருந்து, உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை சரிசெய்யும் சில சைவ உணவுகளை பார்க்கலாம்.

ALSO READ: மழைக்காலத்தில் புரத உணவுகள் ஏன் முக்கியம்..? என்னென்ன உணவுகளை எடுக்க வேண்டும்?

பசலைக் கீரை:

இரும்புச்சத்து நிறைந்த உணவுகளில் முதல் இடம் பசலைக் கீரைக்குதான். இது உங்கள் உடலில் இரத்த அளவை அதிகரிக்க ஒரு சிறந்த ஆதாரம். 100 கிராம் பசலைக் கீரையில் சுமார் 2.7 கிராம் இரும்புச்சத்து உள்ளது. பசலைக் கீரையை உட்கொள்வது உடலில் இரத்தத்தை வேகமாக அதிகரிக்க உதவுகிறது. பசலைக் கீரையை வேகவைத்து சாப்பிட உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், பசலைக் கீரை சூப் மற்றும் சாலடுகளாக சாப்பிடலாம்.

பருப்பு வகைகள்:

பாசிப்பருப்பு, துவரம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் கடலை பருப்பு ஆகியவை இரும்புச்சத்துக்கான நல்ல ஆதாரங்கள் ஆகும். ஒரு கப் பச்சை பருப்பில் சுமார் 6.6 கிராம் இரும்புச்சத்து உள்ளது. இது உடலில் இரத்தத்தை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. வைட்டமின் சி நிறைந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால், இரும்புச்சத்து உடலில் நன்றாக சேரும்.

கொண்டைக்கடலை:

இந்த பட்டியலில் கொண்டைக்கடலையையும் சேர்த்து கொள்ளலாம். இரும்புச்சத்து தவிர, கொண்டைக்கடலை புரதம் மற்றும் நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாகும். நீங்கள் அவற்றை பல வழிகளில் சாப்பிடலாம். கொண்டைக்கடலை குழம்பு, சாலடுகள் மற்றும்  அவியல் போன்றவற்றை செய்து எடுத்து கொள்ளலாம்.

ALSO READ: வெறும் வயிற்றில் ஊறவைத்த கொண்டைக்கடலை சாப்பிடுவீர்களா..? இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு சிக்கலை தரும்!

மாதுளை:

மாதுளை உடலில் இரத்தத்தை அதிகரிக்க இரும்புச்சத்து நிறைந்த ஒரு சிறந்த மூலமாகும். 100 கிராம் மாதுளை விதைகளில் 0.31 மி.கி இரும்புச்சத்து உள்ளது. தினமும் ஒரு மாதுளை சாப்பிடுவது இரத்தத்தை பெருமளவில் அதிகரிக்க உதவுகிறது. இரும்புச்சத்து தவிர, மாதுளையில் வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.