Uric Acid: யூரிக் ஆசிட் அதிகரிக்கிறதா..? உடலில் இந்த பிரச்சனைகள் தோன்றும்..!

Uric Acid Symptoms: யூரிக் அமிலம் கைகள் மற்றும் கால்களின் மூட்டுகளில் வலியை ஏற்படுத்துகிறது. வீக்கம் ஏற்படுகிறது, சிறுநீரகங்களில் வலி தொடங்குகிறது, சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படலாம், சிறுநீரில் இருந்து துர்நாற்றம் வரத் தொடங்குகிறது. கால்களில் வீக்கம் ஏற்படுவதால் நடப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இது சிறுநீரக கல் பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.

Uric Acid: யூரிக் ஆசிட் அதிகரிக்கிறதா..? உடலில் இந்த பிரச்சனைகள் தோன்றும்..!

யூரிக் அமிலத்தின் அறிகுறிகள்

Published: 

10 Nov 2025 15:10 PM

 IST

இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக அதிகரிக்கத் தொடங்கும் போது, ​​சிறுநீரகங்கள் அதை சரியாக வடிகட்ட முடியாமல் போகும். இதுபோன்ற சூழ்நிலையில், உடலின் மூட்டுகளில் யூரிக் அமில படிகங்கள் சேரத் தொடங்குகின்றன. இரத்தத்தில் யூரிக் அமில அளவு அதிகரிக்கும்போது, ஹைப்பர்யூரிசிமியா எனப்படும் ஒரு நிலைக்கு தள்ளி கடுமையான மூட்டு வலியையும், சிறுநீரக கற்கள் (Kidney stones) போன்ற சிக்கல்களையும் ஏற்படுத்தும். யூரிக் அமில அளவு (Uric Acid) அதிகமாக இருக்கும்போது, உடலில் யூரிக் அமில அளவு அதிகமாக இருப்பதை குறிக்கும் சில அறிகுறிகள் உடலில் தோன்றும். இந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டால், யூரிக் அமிலத்தை எளிதாக கட்டுப்படுத்தலாம். இதுபோன்ற சூழ்நிலையில், அதிக யூரிக் அமிலத்தால் உடலில் என்ன அறிகுறிகள் தோன்றும்..? இந்த யூரிக் அமிலத்தை எவ்வாறு குறைக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: இந்த உணவுகளை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?

யூரிக் அமிலத்தால் உடலில் என்னென்ன பிரச்சனைகள் உண்டாகும்..?

யூரிக் அமிலம் கைகள் மற்றும் கால்களின் மூட்டுகளில் வலியை ஏற்படுத்துகிறது. வீக்கம் ஏற்படுகிறது, சிறுநீரகங்களில் வலி தொடங்குகிறது, சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படலாம், சிறுநீரில் இருந்து துர்நாற்றம் வரத் தொடங்குகிறது. கால்களில் வீக்கம் ஏற்படுவதால் நடப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இது சிறுநீரக கல் பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. பியூரின்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கிறது. போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை வடிகட்டுவதில் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது.

மூட்டு வலி மற்றும் வீக்கம்:

அதிக யூரிக் அமிலத்தின் மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்று மூட்டு வலியாகும். மூட்டுகளில் வலியுள்ள பகுதி சிவந்து, வீங்கி, தொடுவதற்கு மிகவும் உணர்திறன் கொண்டதாக மாறும். இந்த வலி நாளடைவில் பெருவிரல், கணக்கால், முழங்கால்கள், முழங்கைகள் மற்றும் விரல்கள் வரை பரவக்கூடும்.

சோர்வு மற்றும் ஆற்றல் குறைவு:

அதிக யூரிக் அமில அளவு உள்ளவர்கள் பெரும்பாலும் சோர்வு மற்றும் சக்தியின்மையை கொடுக்கும். உடல் தொடர்ந்து வீக்கத்தை எதிர்த்து போராடும்போது, அது அதிக சக்தியை எரிக்கிறது. இது நாள் முழுவதும் உங்களை சோர்வாக உணர வைக்கும்.

சிறுநீரில் ஏற்படும் மாற்றங்கள்:

அதிக யூரிக் அமில அளவு சிறுநீரையும் பாதிக்க செய்யும். கடுமையான மணம் கொண்ட சிறுநீர் அதிக யூரிக் அமில அளவை குறிக்கிறது. அதிக யூரிக் அமில அளவு சிறுநீரக கற்களுக்கு வழிவகுக்கும். இது இடுப்பு, வயிற்று பகுதியில் கடுமையான வலி, குமட்டல் அல்லது சிறுநீரில் இரத்தம் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

ALSO READ: உயர் இரத்த அழுத்தம் இருக்கா? இந்த உணவுகளை சாப்பிடாதீங்க!

எப்படி கட்டுப்படுத்தலாம்..?

யூரிக் அமிலப் பிரச்சனையிலிருந்து விடுபட, ஆப்பிள் சீடர் வினிகரை உட்கொள்வதன் மூலம் யூரிக் அமிலப் பிரச்சனையைக் குறைக்கலாம். இது தவிர, இஞ்சியை உட்கொள்வது யூரிக் அமிலத்தைக் குறைப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும். அதிக யூரிக் அமிலத்தைக் குறைக்க, மஞ்சள் நீரைக் குடிக்கலாம். குளிர்ந்த நீருக்குப் பதிலாக வெதுவெதுப்பான எலுமிச்சை நீரைக் குடித்தால், அழுக்கு யூரிக் அமிலம் வடிகட்டப்படும். இதற்காக, வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றைப் பிழிந்து குடிக்கலாம்.