Back Pain: முதுகு வலி ஏற்படுவதற்கான காரணங்களும்.. அதை சுற்றியுள்ள கட்டுக்கதைகளும்!
Types of Back Pain: ஒருவருக்கு மேல் முதுகில் வலி (Back Pain) இருந்தால், அது நரம்பு கிள்ளியதற்கான அறிகுறியாக இருக்கலாம். முதுகு வலியை சுற்றியுள்ள திசுக்கள், எலும்புகள், தசைகள் அல்லது தசைநாண்களில் இருந்து அதிகப்படியான அழுத்தம் இருக்கும்போது இது நிகழ்கிறது.

இன்றைய நவீன வாழ்க்கைமுறையில் பணி சுமை (Work Pressure) காரணமாக நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதாலோ அல்லது தவறான முறையில் அணிவதாலோ முதுகு வலி பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், பெரும்பாலான மக்கள் ஓய்வு எடுத்தால் குறையும் என்று சாதாரணமாக புறக்கணிக்கிறார்கள். இருப்பினும், இவ்வாறு செய்வது உங்கள் முதுகெலும்பை சேதப்படுத்தக்கூடும். ஒருவருக்கு மேல் முதுகில் வலி (Back Pain) இருந்தால், அது நரம்பு கிள்ளியதற்கான அறிகுறியாக இருக்கலாம். முதுகு வலியை சுற்றியுள்ள திசுக்கள், எலும்புகள், தசைகள் அல்லது தசைநாண்களில் இருந்து அதிகப்படியான அழுத்தம் இருக்கும்போது இது நிகழ்கிறது. அதன்படி, முதுகெலும்பை பற்றி பலரும் தவறான ஆரோக்கிய கட்டுக்கதைகள் உண்மைதானா என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
வயதானவர்களுக்கு மட்டும்தான் முதுகு வலி வருமா..?
முதுகு வலி முதுமை காலத்தில் மட்டும்தான் வரும் என்று பலரும் நினைக்கிறார்கள். வலியை புறக்கணித்து, ஆபரேஷன் செய்யும் அளவிற்கு சென்றுவிடுகிறார்கள். உடற்பயிற்சி காயம், விபத்து, உடல் பருமன் அல்லது முறையற்ற எடை தூக்குதல் காரணமாகவும் எந்த வயதிலும் முதுகுவலி ஏற்படலாம். சரியான முறையில் தூங்குதல், வழக்கமான உடற்பயிற்சி, சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதன் மூலம், வயதான காலத்திலும் கூட உங்கள் முதுகெலும்பை வலுவாகவும் நெகிழ்வாகவும் வைத்திருக்க முடியும்.
ALSO READ: அதிகமாக தூங்குவது ஆபத்தா..? நல்ல தூக்கத்திற்கும் நீண்ட நேரம் தூக்கத்திற்கும் என்ன சம்பந்தம்?




முதுகுவலிக்கு ஒரே காரணம் கனமான பொருட்களை தூக்குவதுதான்:
அதிக எடையை ஒரேயடியாக தூக்குவது முதுகுவலிக்கு ஒரு முக்கிய காரணமாகும். இதற்கு வலி மட்டுமே காரணம் அல்ல. அதிக நேரம் குனிந்து நிற்பது. பலவீனமாக தசைகள், நீண்டநேரம் ஒரே நிலையில் அமருவது முதுகுவலிக்கு காரணமாக அமையலாம். இந்த அறிகுறிகளை ஒருபோது புறக்கணிக்கக்கூடாது. எனவே, எடையை சரியாக தூக்க கற்றுக்கொள்வதோடு, பணி நேரத்தில் சிறிது நேரம் நடப்பது முக்கியம்.
நாள்பட்ட முதுகுவலிக்கு அறுவை சிகிச்சை மட்டுமே சிகிச்சையா..?
நீண்ட நாளாக முதுகு வலியால் அவதிப்படுபவர்களுக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வல்ல. சில நேரங்களில் மருந்துகள், பிசியோதெரபி, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு போன்ற மாற்றங்கள் மூலம் முதுகெலும்பு பிரச்சினைகளை சரிசெய்யலாம். நரம்பு சுருக்கம் அல்லது முதுகெலும்பு உறுதியற்ற தன்மை போன்ற கடுமையான நிகழ்வுகளில் மட்டுமே அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. இதுதான் நாம் அன்றாட வாழ்க்கையை பாதிக்க செய்யும்.
ALSO READ: நீங்கள் தினமும் இரவு தாமதமாக சாப்பிடுகிறீர்களா? என்ன பிரச்சனை உண்டாகலாம்?
முதுகுவலிக்கு ஓய்வு மட்டும்தான் தீர்வா..?
முதுகுவலிக்கு ஓய்வு மட்டும்தான் தீர்வு என்று பலரும் சரியான சிகிச்சை எடுத்துகொள்வது கிடையாது. நீண்ட நேரம் படுத்து கிடப்பதால் முதுகு தசைகளை பலவீனப்படுத்தி, சரிசெய்யும் முறை மெதுவாக்கும். அதற்கு பதிலாக நடைபயிற்சி, உடற்பயிற்சி மூலமும் சரி செய்யலாம்.