Morning Drinks: காலையில் எழுந்ததும் எந்த பானம் குடிக்க சிறந்தது..? மருத்துவர் ராஜா கொடுத்த அட்வைஸ்!

Morning Healthy Drinks: காலையில் எழுந்ததும் சில ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மூலம் உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்து கொள்ளலாம். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சில ஆரோக்கியமானவற்றை எடுத்து கொண்டால் படிப்படியாக சோர்வு மற்றும் பலவீனத்தை நீக்கி, உங்கள் முழு நாளையும் ஆற்றல் மிகுந்ததாக மாற்றும்.

Morning Drinks: காலையில் எழுந்ததும் எந்த பானம் குடிக்க சிறந்தது..? மருத்துவர் ராஜா கொடுத்த அட்வைஸ்!

மருத்துவர் ராஜா

Published: 

18 Nov 2025 21:03 PM

 IST

ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அதை மேற்கொள்ள வேண்டுமென்றால் மக்கள் தங்கள் உணவில் இருந்து வாழ்க்கை முறை வரை பல சிறிய மற்றும் பெரிய மாற்றங்களை செய்ய வேண்டும். காலையில் எழுந்ததும் சில ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் (Health Habits) மூலம் உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்து கொள்ளலாம். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சில ஆரோக்கியமானவற்றை எடுத்து கொண்டால் படிப்படியாக சோர்வு மற்றும் பலவீனத்தை நீக்கி, உங்கள் முழு நாளையும் ஆற்றல் மிகுந்ததாக மாற்றும். அந்தவகையில், ராயல் மல்டி கேர் ஹாஸ்பிடல் மருத்துவர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காலையில் வெறும் வயிற்றில் (Morning Drinks) அருந்தக்கூடிய சில ஆரோக்கியமான பானங்கள் பற்றி தெரிவித்துள்ளார்.

ALSO READ: இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இதை சாப்பிட்டால் போதும்.. மருத்துவர் சரண் சூப்பர் டிப்ஸ்!

காலையில் எழுந்ததும் எந்த பானங்களை குடிக்கலாம்..?

எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாற்றை நீரில் கலந்து குடிப்பது எண்ணற்ற நன்மைகளை தரும். இது உங்கள் உடலை நீரேற்றமாக்குவது மட்டுமல்லாமல் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உங்களை புத்துணர்ச்சியடையச் செய்கிறது. இதை தயாரிக்க, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சையை பிழிந்து குடிக்கவும். உங்களுக்கு விருப்பம் எனில் சிறிது தேன் கலந்தும் குடிக்கலாம்.

காய்கறி மற்றும் பழச்சாறு:

ப்ரஸான காய்கறி மற்றும் பழச்சாறு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் இயற்கை சர்க்கரைகளின் அற்புதமான மூலமாகும் . இது உடனடி ஆற்றலை வழங்கி உடலுக்கு ஊட்டமளிக்கிறது. ப்ரஸான காய்கறி மற்றும் பழச்சாறு குடிப்பது உங்கள் ஆரோக்கியத்தில் அதிக நன்மை. எனவே, ஆரஞ்சு, மாதுளை, கேரட், பீட்ரூட் போன்ற உங்களுக்குப் பிடித்த ப்ரஸான காய்கறி மற்றும் பழங்களை ஜூஸர் மூலம் ஜூஸ் செய்யவும். அனைத்து ஊட்டச்சத்துக்களின் நன்மைகளையும் பெற உங்கள் அன்றாட உணவில் பல்வேறு காய்கறி மற்றும் பழச்சாறுகளையும் குடியுங்கள்.

சீரக தண்ணீர்:

சீரக தண்ணீர் செரிமானத்திற்கு சிறந்ததாகக் கருதப்படுகிறது. இது வீக்கம், அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. காலையில்  சீரக தண்ணீரைக் குடிப்பது உங்கள் செரிமான அமைப்பு செயல்பட உதவுகிறது. இதனால் நாள் முழுவதும் நீங்கள் லேசாகவும் சுறுசுறுப்பாகவும் உணர முடியும். இதைத் தயாரிக்க, ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் இந்த தண்ணீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்கவும்.

ALSO READ: காயத்தின் மீது தேங்காய் எண்ணெயை தடவலாமா..? மருத்துவர் சரவணன் விளக்கம்!

க்ரீன் டீ:

கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து நம் உடலைப் பாதுகாக்க உதவுகிறது. இதில் சீரான அளவு காஃபின் உள்ளது. இது உடனடி ஆற்றலை வழங்குகிறது . இதை தயாரிக்க, ஒரு கப் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் கிரீன் டீ இலைகள் அல்லது ஒரு கிரீன் டீ பையைச் சேர்க்கவும். 2-3 நிமிடங்கள் ஊற வைத்து, பின்னர் வடிகட்டி குடிக்கவும். உங்கள் விருப்பம் இருந்தால் சிறிது எலுமிச்சை அல்லது தேனையும் கலந்து குடிக்கலாம்.

8 மணி நேர வேலை கோரிய தீபிகா படுகோன்
காதலரை கரம் பிடிக்கப்போகும் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா?
பென்சிலால் துளையிடும் அளவுக்கு ரூ.1.5 கோடி மதிப்பிலான வீடுகளின் தரம்
ஒரே மாதத்தில் பத்து கிலோ உடல் எடை குறைந்த கே-பாப் பாடகி! என்ன ஆனது அவருக்கு?