Health Tips: காயத்தின் மீது தேங்காய் எண்ணெயை தடவலாமா..? மருத்துவர் சரவணன் விளக்கம்!
Coconut Oil: காயங்களில் தேங்காய் எண்ணெயை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. தேங்காய் எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருந்தாலும், எண்ணெயின் பிசுபிசுப்பு தன்மை காயம் ஆறும் பண்பை மெதுவாக்கும், ஆக்ஸிஜன் ஓட்டத்தை குறைக்கும், பாக்டீரியா, தூசி போன்றவை எண்ணெயின் பிசுபிசுப்பு தன்மையில் ஒட்டிகொண்டு காயத்தை இன்னும் பெரியதாக்க செய்யலாம்.

தேங்காய் எண்ணெய் - காயம்
தேங்காய் எண்ணெய் (Coconut Oil) நீண்ட காலமாக வீட்டு வைத்தியங்களில் பயன்படுத்தப்படுகிறது. தலைக்கு எண்ணெய் வைப்பது முதல் சமையல் வரை பல வகைகளிலும் பயன்படுத்தப்படும். காயங்களிலிருந்து ஏற்படும் தழும்புகளை நீக்குவதற்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெயில் ஆக்ஸிஜனேற்றிகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் (Antibacterial) உள்ளன. எனவே இது சருமத்தை ஊட்டமளிப்பது மட்டுமல்லாமல், தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. எனவே, தேங்காய் எண்ணெய் தடிப்புகள், பருக்கள், அரிப்பு போன்ற சருமப் பிரச்சினைகளைப் போக்குவதில் பயனுள்ளதாக இருக்கும். சிறு வயதில் நமக்கு சிராய்புகள் ஏற்பட்டால் முதல் நம் வீட்டு பெரியவர்கள் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவார்கள். இது தவறு என்று ஆர்.கே.பி மருத்துவமனை மருத்துவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
காயங்கள் ஏற்பட்டவுடன் ஏன் தேங்காய் எண்ணெயை வைக்கக்கூடாது..?
காயங்களில் தேங்காய் எண்ணெயை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. தேங்காய் எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருந்தாலும், எண்ணெயின் பிசுபிசுப்பு தன்மை காயம் ஆறும் பண்பை மெதுவாக்கும், ஆக்ஸிஜன் ஓட்டத்தை குறைக்கும், பாக்டீரியா, தூசி போன்றவை எண்ணெயின் பிசுபிசுப்பு தன்மையில் ஒட்டிகொண்டு காயத்தை இன்னும் பெரியதாக்க செய்யலாம். காயம் ஏற்பட்டால் முதலில் சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். அதனை தொடர்ந்து, காயத்தை பேண்டேஜ் கொண்டு மூடுவது பாதுகாப்பானது.
அதேபோல், சீழ் உள்ள காயங்களுக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது பிரச்சனையை மோசமாக்கி, தொற்று அபாயத்தை அதிகரிக்கும். அதன்படி, தேங்காய் எண்ணெய்காயங்களில் சீழ் பிரச்சனையை அதிகரிக்கக்கூடும். எனவே, ஆழமான மற்றும் பெரிய காயங்களுக்கு தேங்காய் எண்ணெயை தவிர்ப்பது நல்லது.
காயத்தின் மீது தேங்காய் எண்ணெயை எப்போது தடவ வேண்டும்..?
- காயம் ஆறும் நிலையில் எரிச்சல் ஏற்பட்டால், தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது நன்மை பயக்கும். ஏனெனில், இது காயத்தை விரைவாக குணப்படுத்த உதவி செய்யும். மேலும், புதிய சரும செல்கள் உருவாவதை ஊக்குவிக்கும்.
- காயம் ஆறிய பிறகும் உங்களுக்கு தோளில் எரிச்சல் ஏற்பட்டால், தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது நன்மை பயக்கும். ஏனெனில், இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது தொற்றுநோயை குறைக்க உதவுகிறது.
- காயம் ஆறிய பிறகு ஏற்படும் வடுக்களை குறைப்பதற்கும் தேங்காய் எண்ணெய் நன்மை பயக்கும். அதன்படி, கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில் கரைத்து காய்ச்சினால், பழமையான வடுக்கள் கூட மறையும்.