Chia seeds Weight Loss: சியா விதைகள் உடல் எடையை எவ்வாறு குறைக்கின்றன..? பிரபல மருத்துவர் சூப்பர் டிப்ஸ்!
Reduce Belly Fat with Chia Seeds: டாக்டர் அருண்குமார், சியா விதைகளின் ஊட்டச்சத்து மதிப்பையும், தொப்பை கொழுப்பு குறைப்பு மற்றும் எடை இழப்பில் அதன் பயன்பாட்டையும் விளக்குகிறார். அதிக நார்ச்சத்து கொண்ட சியா விதைகள், வயிற்றை நிரப்பி, பசி கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது. ஆனால், சியா விதைகள் மட்டும் போதாது, சீரான உணவு மற்றும் உடற்பயிற்சியும் அவசியம்.

சியா விதைகள்
தொப்பையை குறைக்க விரும்புபவர்களுக்கு, டயட்டை திட்டமிடுபவர்களுக்கு சியா விதைகள் (Chia seeds) ஒரு சிறந்த சூப்பர் ஃபுட் ஆகும். அதேநேரத்தில், சீரான உணவு, உடல் செயல்பாடு மற்றும் உணவில் சில உணவுகளை உட்கொள்வது முக்கியம். சியா விதைகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவைகள், இவை ஒரே நேரத்தில் பல வகையான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கின்றன. சியா விதைகளில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இவை எடையை கட்டுப்படுத்துவதில் மிகவும் முக்கியம். இந்த விதைகளில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இவை செரிமானத்தை (Digestion) மேம்படுத்துகிறது. இந்தநிலையில், பிரபல டாக்டர் அருண்குமார், எம்.டி. (குழந்தை மருத்துவம்), பிஜிபிஎன் (பாஸ்டன்),
குழந்தை நல ஆலோசகர் / உணவுமுறை ஆலோசகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சியா விதைகள் மூலம் உடல் எடை குறைப்பது எப்படி? என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
சியா விதைகள் மூலம் உடல் எடை குறைப்பது எப்படி?
பிரபல டாக்டர் அருண்குமார் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சியா விதைகளை பலரும் சூப்பர் ஃபுட் என்று அழைக்கிறார்கள். ஒரு 100 கிராம் சியா விதைகளில் 486 கலோரிகளும், 42 கிராம் கார்போ ஹைட்ரேட்டும், 34 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதன் காரணமாக, உடலில் பெரியளவில் சர்க்கரையை ஏற்படுத்தாது. 16 கிராம் புரத சத்தும், நல்ல கொழுப்புகள் 30 கிராமும் உள்ளது. மேலும், ஒமெகா 3 கொழுப்பானது 17 கிராமும், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து 7 கிராமும் உள்ளது.
ALSO READ: வெறும் வயிற்றில் டீ குடிக்கக்கூடாதா..? செரிமானப் பிரச்சினைகளுக்கு ஏற்படும் தொந்தரவு!
டாக்டர். அருண்குமார் விளக்கம்:
அதன்படி, நிறைய பேர் சியா விதைகளை எடுத்துகொண்டால், உடல் எடை குறைந்துவிடும், சர்க்கரை நோய் காணாமல் போய்விடும், கொழுப்பு கரைந்துவிடும், உடம்பில் இருக்கும் எல்லா நோய்களும் ஓடிவிடும் என்று நம்புகிறார்கள். அதேநேரத்தில், சியா விதைகள் மக்கள் நினைக்கும் அளவிற்கு சூப்பர் ஃபுட் எல்லாம் கிடையாது. அதை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்துகொள்வதே முக்கியம்.
நார்மலாக நீங்கள் ஸ்நாக்ஸ், பஜ்ஜி போன்ற உணவுகளை மாலை வேளை சாப்பிட்டு வந்த நபர்கள், இதற்கு பதிலாக சியா விதைகள் கலந்த ஜூஸ், லெமன் வாட்டர் போன்றவற்றை எடுத்துகொண்டால் ஒருவேளை கொழுப்பு குறையலாம். அதேநேரத்தில், இதுபோன்று எல்லா உணவுகளை சாப்பிட்டுவிட்டு, இதனுடன் 2 ஸ்பூன் சியா விதைகளை சாப்பிட்டால் எந்த பலனும் கிடைக்காது. ” என்று தெரிவித்தார்.
ALSO READ: சாப்பிட்ட பின் செய்யக்கூடாத தவறுகள்: ஆரோக்கியத்தை பாதுகாக்க அறிய வேண்டியவை!
சியா விதைகள் தொப்பை கொழுப்பை எவ்வாறு குறைக்கும்..?
சியா விதைகள் தொப்பையை குறைப்பது மட்டுமல்லாமல் எடையை குறைக்கவும் உதவுகின்றன. இந்த விதைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது நீண்ட நேரம் வயிற்றை நிரப்ப செய்கிறது. 2 ஸ்பூன் சியா விதைகளில் சுமார் 10 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது உணவு பசியை கட்டுப்படுத்தி, நீண்ட நேரம் வயிற்றை நிரம்ப செய்யும். சியா விதைகளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து தண்ணீரை உறிஞ்சி, வயிற்றில் விரிவடைந்து, ஜெல் போன்ற பொருளை உருவாக்குகிறது. இது செரிமானத்தை மெதுவாக்கும்.