Thyroid During Pregnancy: கர்ப்ப காலத்தில் தைராய்டின் பங்கு.. தாய், குழந்தைக்கு நலத்திற்கு இது ஏன் முக்கியம்?

Pregnancy and Thyroid: தைராய்டு ஹார்மோன் குறைபாடு அல்லது அதிகரிப்பு கர்ப்பத்திற்கும் குழந்தையின் வளர்ச்சிக்கும் ஆபத்தை விளைவிக்கும். ஹைப்போ மற்றும் ஹைப்பர் தைராய்டிசத்தின் அறிகுறிகள், அவற்றின் தீவிரம், மற்றும் ஆரம்பகால பரிசோதனையின் முக்கியத்துவம் இக்கட்டுரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. கர்ப்ப காலத்தில் தைராய்டு சுரப்பியின் முக்கிய பங்கு குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thyroid During Pregnancy: கர்ப்ப காலத்தில் தைராய்டின் பங்கு.. தாய், குழந்தைக்கு நலத்திற்கு இது ஏன் முக்கியம்?

கர்ப்ப காலத்தில் தைராய்டு பிரச்சனை

Published: 

28 Jul 2025 12:11 PM

கர்ப்பம் (Pregnancy) என்பது ஒரு பெண்ணும் காணும், ஏங்கும் மிகப்பெரிய கனவு. கர்ப்ப காலத்தின்போது பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். இந்த மாற்றங்களுக்கு ஏற்ப பல்வேறு உறுப்புகள் வளர்ச்சி பெறும். இந்த நிலைகளில், தைராய்டு சுரப்பி மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. இருப்பினும், இவற்றிம் பங்களிப்பு பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. தைராய்டு (Thyroid) சுரப்பி கழுத்துப் பகுதியில் அமைந்துள்ளது. மேலும், இது வளர்சிதை மாற்றம், ஆற்றல் நிலை மற்றும் உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஒழுங்குபடுத்த உதவும் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இவை அனைத்தும் ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகிறது.

கர்ப்ப காலத்தில் தைராய்டின் பங்கு:

கர்ப்ப காலத்தின்போது பெண்களின் உடலுக்கு அதிகப்படியான தைராய்டு ஹார்மோன் தேவைப்படுகிறது. அதிலும், குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் குழந்தையின் மூளை வளர்ச்சி, நரம்பு மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சி ஆகியவற்றிற்கு ஹார்மோன்கள் மிகவும் முக்கியமானவை. தைராய்டு ஹார்மோனில் ஒரு சிறிய குறைபாடு கூட தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் ஆபத்தை விளைவிக்கும்.

கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய 2 முக்கிய பிரச்சனைகள் ஏற்படலாம். முதலாவது ஹைப்போ தைராய்டிசம், குறைந்த ஹார்மோன் அளவை ஏற்படுத்தும் ஒரு செயலற்ற தைராய்டு. இரண்டாவது ஹைப்பர் தைராய்டிசம், இது அடிப்படையில் அதிகப்படியான ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் மிகவும் சுறுசுறுப்பான தைராய்டு ஆகும்.

ALSO READ: கர்ப்ப காலத்தில் எப்படி தூங்குவது குழந்தைக்கு நல்லது..? இடது பக்கம் தூங்குவது ஏன் நல்லது ?

பெண்கள் புறக்கணிக்கக்கூடாத அறிகுறிகள்:

கர்ப்ப காலத்தில், பெண்கள் சோர்வு, மனநிலையில் விரைவான மாற்றங்கள் மற்றும் உடல் எடையில் தொடர்ச்சியான மாற்றங்கள் போன்றவை ஏற்படும். ஹைப்போ தைராய்டிசத்தின் அறிகுறிகளை பொறுத்தவரை அசாதாரண சோர்வு, உடல் எடை அதிகரிப்பு, வெப்பமான காலநிலையிலும் குளிர்ச்சியாக உணருதல், வறண்ட சருமம் மற்றும் மெலிந்த முடி, அடிக்கடி மனச்சோர்வு மற்றும் மெதுவான இதயத் துடிப்பு போன்றவை ஏற்படும்.

ஹைப்பர் தைராய்டிசத்தின் அறிகுறிகளாக கர்ப்ப காலத்தில் எடை அதிகரிக்க முடியாமல் போவது, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, அதிகப்படியான வியர்வை, பதட்ட நிலை அதிகரிப்பு, தூங்குவதில் சிரமம் மற்றும் சில சந்தர்ப்பங்களில் கண்கள் வீங்குதல் போன்றவை ஏற்படும். எனவே, மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று இருந்தால், கர்ப்பிணி பெண்கள் உடனடியாக தங்கள் மருத்துவர்களை அணுக வேண்டும்.

ஆரம்பகால பரிசோதனையின் முக்கியத்துவம்:

தைராய்டு செயல்பாட்டு சோதனைகள் அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும், குறிப்பாக குடும்பத்தில் தைராய்டு நோயின் பின்னணியை கொண்ட பெண்களுக்கும் ஏற்படும். தைராய்டு போன்ற பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிவது மிகவும் முக்கியம்.

ALSO READ: விரைவில் ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகள்.. பரிசோதனை வெற்றி.. முழு விவரம்!

தாய்க்கு தைராய்டு கோளாறுகள் இருந்தும் புறக்கணித்தால் கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை, கருச்சிதைவு, நஞ்சுக்கொடி சீர்குலைவு, குழந்தைக்கு குறைப்பிரசவம், குறைந்த பிறப்பு எடை, நரம்பு வளர்ச்சி அமைப்பில் உள்ள பிரச்சினைகள் மற்றும் குழந்தை இறந்து பிறத்தல் போன்றவை ஏற்படலாம். இது தாய்க்கும், குழந்தைக்கும் ஆபத்தை தரும்