Health Tips: சமையலில் எந்த எண்ணெய் ஆரோக்கியத்திற்கு நல்லது..? இவ்வளவு நன்மைகளை தருமா..?

Oil for Health Benefits: ஆலிவ் எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய் இரண்டும் அவற்றின் சொந்த நன்மைகளைக் கொண்டுள்ளன. ஆலிவ் எண்ணெய் இதயம் மற்றும் எடை கட்டுப்பாட்டுக்கு நல்லது. அதே நேரத்தில், கடுகு எண்ணெய் செரிமானம் மற்றும் எலும்புகளுக்கு நன்மை பயக்கும்.

Health Tips: சமையலில் எந்த எண்ணெய் ஆரோக்கியத்திற்கு நல்லது..? இவ்வளவு நன்மைகளை தருமா..?

சமையல் எண்ணெய்

Published: 

14 Sep 2025 15:29 PM

 IST

எண்ணெய் நமது அன்றாட உணவில் (Food) ஒரு முக்கிய பகுதியாகும். உணவின் சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், அது நமது ஆரோக்கியத்திலும் முக்கியமான விளைவை ஏற்படுத்துகிறது. இருப்பினும், எந்த எண்ணெய் (Oil) நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதை பலரும் அறிந்திருக்கவில்லை. அதன்படி, நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயா என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்துள்ளது. ஒவ்வொரு எண்ணெய்க்கும் அதன் தனிச்சிறப்புகளும், பல நன்மைகளை கொண்டுள்ளது. ஆனால் சரியான தேர்வு உங்கள் தேவைகள் மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இந்தநிலையில், எந்தெந்த எண்ணெய்கள் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகளை தரும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ஆலிவ் எண்ணெய்:

ஆலிவ் எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இவை கொழுப்பைக் குறைக்கவும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. மேலும், ஆலிவ் எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்கி தேவையான ஊட்டத்தையும் வழங்குகிறது. அதேநேரத்தில், இது உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது.

ALSO READ: கடவுளுக்கு படைக்கப்படும் இலை.. உடலுக்கு இவ்வளவு நன்மைகளை தருமா..?

கடுகு எண்ணெய்:

இந்திய உணவில் கடுகு எண்ணெய் மிகவும் பாரம்பரிய பகுதியாகும். இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை எலும்புகள் மற்றும் மூட்டுகளை வலுப்படுத்த உதவுகின்றன. இந்த எண்ணெய் செரிமான அமைப்பை வலுப்படுத்தி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது அதிக தீயில் கூட நன்றாக வேலை செய்வததுடன், உணவை சுவையாகவும் மாற்றும். கடுகு எண்ணெயைக் கொண்டு லேசான உடல் மசாஜ் செய்வது உடலை சூடாக வைத்திருக்கும்.

நல்லெண்ணெய்:

நல்லெண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும். இது சரும ஈரப்பதத்தை பராமரிக்கவும், வறண்ட சருமத்தை மென்மையாக்கவும் உதவுகிறது. வைட்டமின் ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற பண்புகள் நல்லெண்ணெய் காணப்படுகின்றன. இது வயதான விளைவுகளை மெதுவாக்கவும் சுருக்கங்களைக் குறைக்கவும் உதவும். நல்லெண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும். இது சரும ஈரப்பதத்தை பராமரிக்கவும், வறண்ட சருமத்தை மென்மையாக்கவும் உதவுகிறது. வைட்டமின் ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற பண்புகள் நல்லெண்ணெயில் காணப்படுகின்றன. இது வயதான விளைவுகளை மெதுவாக்கவும் சுருக்கங்களைக் குறைக்கவும் உதவும்.

ALSO READ: சிறுநீர் கழித்த உடனே தண்ணீர் குடிக்கலாமா? இந்த பிரச்சனையை உண்டாக்கும் அபாயம்!

ஆலிவ் எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய் இரண்டும் அவற்றின் சொந்த நன்மைகளைக் கொண்டுள்ளன. ஆலிவ் எண்ணெய் இதயம் மற்றும் எடை கட்டுப்பாட்டுக்கு நல்லது. அதே நேரத்தில், கடுகு எண்ணெய் செரிமானம் மற்றும் எலும்புகளுக்கு நன்மை பயக்கும். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்கள் தேவையையும் ஆரோக்கியத்தையும் மனதில் கொண்டு எண்ணெயைத் தேர்ந்தெடுத்து ஆரோக்கியமான வாழ்க்கையை மேம்படுத்த உதவும். இருப்பினும், பலர் நல்லெண்ணெயை பலருக்கும் பயன்படுத்துவது கிடையாது. இது உடலுக்கு பல வகைகளில் நன்மை பயக்கும்.