Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Iron Rich Foods: ஹீமோகுளோபினை அதிகரிக்க எடுத்துக்கொள்ள வேண்டிய இயற்கை உணவுகள்!

Boost Hemoglobin Naturally : நமது உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனை வழங்குவதில் ஹீமோகுளோபின் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறைந்த ஹீமோகுளோபின் உள்ளவர்களுக்கு சோம்பல், தோல் மஞ்சள் நிறமாக மாறுதல், தலைவலி மற்றும் தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். இதுபோன்ற சமயங்களில், இயற்கையாகவே ஹீமோகுளோபின் அதிகரிக்க சில உணவுகளை உட்கொள்வது அவசியம். அவற்றைப் பற்றி இப்போது அறிந்து கொள்வோம்.

Iron Rich Foods: ஹீமோகுளோபினை அதிகரிக்க எடுத்துக்கொள்ள வேண்டிய இயற்கை உணவுகள்!
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 20 May 2025 23:28 PM

நமது உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனை வழங்குவதில் ஹீமோகுளோபின் மிகவும் முக்கியமானது. இது இரத்த சிவப்பணுக்களில் காணப்படும் ஒரு முக்கியமான புரதமாகும். எனவே உடலில் ஹீமோகுளோபினை சரியாக பராமரிப்பது மிகவும் முக்கியம். குறைந்த ஹீமோகுளோபின் உள்ளவர்களுக்கு சோம்பல், தோல் மஞ்சள் நிறமாக மாறுதல், தலைவலி மற்றும் தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். இதுபோன்ற சமயங்களில், இயற்கையாகவே ஹீமோகுளோபின் அதிகரிக்க சில நல்ல உணவுகளை உட்கொள்வது அவசியம். ஹீமோகுளோபினை அதிகரிக்க இரும்புசத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.  அவற்றைப் பற்றி இப்போது அறிந்து கொள்வோம்.

இரும்புச் சத்து உள்ள உணவுகள்

  • பருப்பு வகைகளில் புரதம் அதிகம். அனைத்து வகையான பருப்பு வகைகளிலும் இரும்புச்சத்து மற்றும் ஆற்றல் தரும் புரதங்கள் உள்ளன. பருப்பு வகைகள், கொண்டைக்கடலை மற்றும் வேர்கடலை போன்ற பருப்பு வகைகள் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட்டின் அளிக்கின்றன. இவற்றை உணவில் சேர்ப்பது இயற்கையாகவே இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
  • கீரையில் இரும்புச்சத்து அதிகம். அதனால்தான் இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது. இதை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரித்து ஹீமோகுளோபின் அளவு மேம்படும்.
  • பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட பல தாதுக்கள் நிறைந்துள்ளன. இது இரத்தத்தை சுத்திகரிக்கவும், ஹீமோகுளோபினை அதிகரிக்கவும் உதவுகிறது. பீட்ரூட்டை சாலட் அல்லது ஜூஸாக உட்கொள்ளலாம்.
  • மாதுளையில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது இரத்த சோகை பிரச்னைகளைத் தடுக்க உதவுகிறது. இந்தப் பழத்தை தினமும் சாப்பிடுவதால் உடலில் இரத்த உற்பத்தி மேம்படும்.
  • முட்டையில் உள்ள இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி12 உடலுக்குத் தேவையான இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது ஹீமோகுளோபினை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்களுக்கு நல்ல ஆற்றலையும் தருகிறது.
  • கொண்டக்கடலையில் இரும்புச்சத்து, புரதம் மற்றும் நார்ச்சத்து போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை இரத்தத்தை வலுப்படுத்த உதவுகின்றன. கொண்டைக்கடலையை  சமைத்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.
  • பூசணி விதைகள் சிறியதாகத் தோன்றினாலும், அவை பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. இது இரும்பு, மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களால் நிறைந்துள்ளது. இது இயற்கையாகவே ஹீமோகுளோபின் அதிகரிக்க உதவுகிறது.
  • சைவ உணவு உண்பவர்களுக்கு டோஃபு இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமாகும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்குத் தேவையான ஆற்றலை வழங்குகின்றன. டோஃபுவை காய்கறிகளுடனும் சாலட்களிலும் பயன்படுத்தலாம்.
  • சால்மன், மற்றும் சார்டின் போன்ற மீன்களில் இரும்புச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இவை உடலுக்குத் தேவையான கொழுப்புகளை வழங்கி இரத்த சோகையைக் குறைக்க உதவுகின்றன. இவற்றை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது உடலில் ஆரோக்கியமான ஹீமோகுளோபின் அளவைப் பராமரிக்க உதவும்.
ராஜஸ்தான் அபார வெற்றி - தல தோனியிடம் ஆசிபெற்ற வைபவ் சூர்யவன்ஷி
ராஜஸ்தான் அபார வெற்றி - தல தோனியிடம் ஆசிபெற்ற வைபவ் சூர்யவன்ஷி...
ஹீமோகுளோபினை அதிகரிக்க எடுத்துக்கொள்ள வேண்டிய இயற்கை உணவுகள்!
ஹீமோகுளோபினை அதிகரிக்க எடுத்துக்கொள்ள வேண்டிய இயற்கை உணவுகள்!...
உடலில் பொட்டாசியம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்னைகள்!
உடலில் பொட்டாசியம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்னைகள்!...
செம்பு பாத்திரத்தில் பால் குடித்தால் ஏற்படும் பிரச்னைகள்!
செம்பு பாத்திரத்தில் பால் குடித்தால் ஏற்படும் பிரச்னைகள்!...
பாரிஸ் மெட்ரோவில் இந்திய பாரம்பரிய உடையில் கலக்கிய பெண்!
பாரிஸ் மெட்ரோவில் இந்திய பாரம்பரிய உடையில் கலக்கிய பெண்!...
நெடுஞ்சாலையில் காரில் சென்றவருக்கு நடந்த பயங்கரம் - வைரல் வீடியோ!
நெடுஞ்சாலையில் காரில் சென்றவருக்கு நடந்த பயங்கரம் - வைரல் வீடியோ!...
அலாரத்தை ஸ்நூஸ் செய்து தூங்குறீங்களா? மூளையை கடுமையாக பாதிக்கும்
அலாரத்தை ஸ்நூஸ் செய்து தூங்குறீங்களா? மூளையை கடுமையாக பாதிக்கும்...
ஐபிஎல்லில் தொல்லை தரும் மழை.. புதிய விதியை அமல்படுத்திய பிசிசிஐ!
ஐபிஎல்லில் தொல்லை தரும் மழை.. புதிய விதியை அமல்படுத்திய பிசிசிஐ!...
15 நிமிடத்தில் இந்திய ரயில்வே மட்டன் கறி செய்வது எப்படி..?
15 நிமிடத்தில் இந்திய ரயில்வே மட்டன் கறி செய்வது எப்படி..?...
ஃபார்ம் 16 இல்லையா? வருமான வரி தாக்கல் செய்வது எப்படி?
ஃபார்ம் 16 இல்லையா? வருமான வரி தாக்கல் செய்வது எப்படி?...
சிவகங்கை கல்குவாரி விபத்து.. 5 பேர் உயிரிழந்த சோகம்!
சிவகங்கை கல்குவாரி விபத்து.. 5 பேர் உயிரிழந்த சோகம்!...