Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Health Tips: தினமும் RO வாட்டர் குடிக்கிறீர்களா..? குடிக்கும்முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்!

Is RO Water Safe to Drink: RO தண்ணீரை தொடர்ந்து குடிப்பது நாளடைவில் சோர்வு, பலவீனம், தசைப்பிடிப்பு மற்றும் இதய பிரச்சனைகள் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். மேலும், இந்த வாட்டர் மெக்னீசியம் மற்றும் கால்சியம் குறைபாட்டையும் ஏற்படுத்தும். RO வாட்டரில் போதுமான தாதுக்கள் இருக்காது.

Health Tips: தினமும் RO வாட்டர் குடிக்கிறீர்களா..? குடிக்கும்முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்!
Ro வாட்டர்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 04 Nov 2025 12:45 PM IST

RO என்று அழைக்கப்படும் ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் தண்ணீரை (RO Water) சுத்திகரித்து நமக்கு தருகிறது. இப்போதெல்லாம், பல வீடுகளில் RO அமைப்புகள் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் வீட்டில் தண்ணீர் சுத்தமாக இல்லாதபோது அல்லது அதன் நிறம் சற்று மஞ்சள் நிறமாக இருந்தால், அப்போது RO அதை சுத்திகரிக்கிறது. இருப்பினும், தொடர்ந்து RO வாட்டரை குடிப்பது ஆரோக்கியத்திற்கு (Health) தீங்கு விளைவிக்கும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது RO வாட்டர் குடிப்பதன்மூலம் ஏற்படும் உடல்நல விளைவுகள் உடனடியாக இல்லையென்றாலும், காலப்போக்கில் தெரியக்கூடும். அந்தவகையில், RO வாட்டர் குடிப்பது உடல்நலத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

RO தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்:

RO தண்ணீரை தொடர்ந்து குடிப்பது நாளடைவில் சோர்வு, பலவீனம், தசைப்பிடிப்பு மற்றும் இதய பிரச்சனைகள் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். மேலும், இந்த வாட்டர் மெக்னீசியம் மற்றும் கால்சியம் குறைபாட்டையும் ஏற்படுத்தும். RO வாட்டரில் போதுமான தாதுக்கள் இருக்காது. நீங்கள் ஆரோக்கியமான எதையாவது சாப்பிடும்போது, இந்த உணவில் உள்ள தாதுக்களும் இந்த தண்ணீரை குடிப்பதன் மூலம் சிறுநீடில் வெளியேற்றப்படும். இதன் காரணமாகவும் ஆரோக்கியமான உணவு கூட தாது பற்றாக்குறைக்கு வழிவகுக்கும்.

ALSO READ: பால் குடித்த பிறகு உங்களுக்கு வாயு பிரச்சனைகள் ஏற்படுகிறதா? அதற்கான காரணங்கள்!

இதயத்தை பாதிக்கலாம்:

RO வாட்டரால் இதய ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. இந்த நீர் அமிலத்தன்மையை அதிகளவிலும், தாதுக்கள் இல்லாததாகவும் இருக்கும். எனவே, இந்த நீரை உட்கொள்வது இதய துடிப்பை பாதித்து, தசை வலியையும் ஏற்படுத்தலாம்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு RO வாட்டர் ஒரு ஆபத்து காரணியாக இருக்கலாம். இரைப்பை பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த தண்ணீரை குடிப்பதை தவிர்க்கவும். மேலும், இது மஞ்சள் காமாலை, இரத்த சோகை மற்றும் பிற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.

இதற்கு என்ன தீர்வு..?

  • RO வாட்டரை குடிப்பதற்கு பதிலாக, நீங்கள் அதை நேரடியாக கொதிக்க வைத்து குடிக்கலாம். நீராவி ஆவியாக தொடங்கும்போது ஆஃப் செய்து உட்கொள்ளலாம்.
  • ஒரு லிட்டர் தண்ணீரில் சுமார் 5 சொட்டு அயோடினை சேர்த்து ஒரு மணிநேரத்திற்கு பிறகு குடிக்கலாம்.
  • ஒரு லிட்டர் தண்ணீரில் 4 சொட்டு குளோரின் சேர்க்கலாம். அதற்குமேல், சேர்க்காமல் இருப்பது நல்லது. இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

ALSO READ: மழைநீர் குடிக்கும் பழக்கம் உள்ளதா? இது ஆரோக்கியத்திற்கு நல்லதா..?

கேன் தண்ணீரை குடிப்பது நல்லதா..?

பெரிய கேன்களில் விற்கப்படும் தண்ணீரும் சுத்தமானது என்பதற்கு உத்தரவாதம் இல்லை. அதன் தூய்மை சோதிக்கப்படுவதில்லை. ஆலைகளில் சுகாதார வசதிகள் இல்லை. உடலின் ஆரோக்கியத்திற்கு மெக்னீசியம், கால்சியம் மற்றும் சோடியத்துடன் பாதரசம், ஃப்ளோரைடு மற்றும் குளோரின் ஆகியவை அவசியம்.குடிப்பதற்கு முன் தண்ணீரை கொதிக்க வைப்பது நல்லது.