Health Tips: வெறும் வயிற்றில் லெமன் ஜூஸ் குடிப்பது நல்லதா..? ஏன் குடிக்கக்கூடாது தெரியுமா..?
Empty Stomach Lemon Water: வெறும் வயிற்றில் எலுமிச்சை நீர் குடிப்பது பலருக்குப் பரிந்துரைக்கப்படுகிறது என்றாலும், அதன் தீமைகளையும் அறிந்துகொள்வது அவசியம். சிட்ரிக் அமிலத்தின் அளவு அதிகம் என்பதால், பல் அரிப்பு, நெஞ்செரிச்சல், இரைப்பை புண்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எலக்ட்ரோலைட் சமநிலையின்மை ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஆனால், உணவுக்குப் பின் குடித்தால், இது பல நன்மைகளை அளிக்கும்.

உலகம் முழுவதும் உள்ள பல நபர்கள் ஆரோக்கியமாக பலரும் பல விஷயங்களை மேற்கொள்கிறார்கள். அதன்படி, உடற்பயிற்சி (Exercise) மற்றும் எடையை குறைக்கும் முயற்சியில், எல்லோரும் ஏதாவது ஒரு ஜூஸ் அல்லது சூப்பை தயாரித்து குடிக்கிறார்கள். இது மாதிரி காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீர் அல்லது ஜூஸ் (lemon Juice) குடிப்பது மிகவும் இயல்பான ஒன்றாகும் . சமூக ஊடகங்கள் மற்றும் ஜிம் பயிற்சியாளர்கள் கூட இதை எடை குறைக்க ஒரு சிறந்த வழி என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த ஆரோக்கியமான பழக்கம் உங்கள் உடலுக்கும் தீங்கு விளைவிக்குமா? என்ற கேள்வி எழுகிறது.
பொதுவாகவே, எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. இதை, வெறும் வயிற்றில் இதைக் குடிப்பது செரிமான அமைப்பு, பல் ஆரோக்கியம் மற்றும் இரைப்பை அமைப்பு ஆகியவற்றில் பிரச்சனையை ஏற்படுத்தும். இந்தப் பழக்கம் எவ்வளவு நன்மை பயக்கும், எங்கு தீங்கு விளைவிக்கும் என்பதை எங்கே தெரிந்துகொள்வோம்.
ALSO READ: சுகர், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த வெங்காயச் சாறு போதுமா..?




நெஞ்செரிச்சல்:
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் அல்லது நீரை குடிப்பதால் பலருக்கு நெஞ்செரிச்சல் , ஏப்பம் அல்லது வாயு போன்ற பிரச்சினைகள் ஏற்படத் தொடங்குகின்றன .
பல் ஆரோக்கியத்தில் சேதம்:
எலுமிச்சையில் உள்ள அமிலம் உங்கள் பற்களின் பாதுகாப்பு அடுக்கை மெதுவாக அரிக்க தொடங்கும். இதனால், உங்கள் பற்கள் உணர்திறன் மிக்கதாக மாறி விரைவாக சிதைவதற்கு வழிவகுக்கும் .
இரைப்பை புண்களின் ஆபத்து:
வெறும் வயிற்றில் காலையில் எழுந்ததும் எலுமிச்சை ஜூஸை மீண்டும் மீண்டும் குடிப்பது வயிற்று சவ்வை சேதப்படுத்தும். தொடர்ந்து, இதை நீண்ட காலத்திற்கு எடுத்து கொள்ளும்போது வயிற்றில் புண்கள் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் .
எலக்ட்ரோலைட் சமநிலையின்மை:
வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் குடிப்பது சிறுநீர் கழிப்பதை அதிகரிக்கிறது. இது உடலில் நீரிழப்பு, சோடியம் மற்றும் பொட்டாசியம் இழப்புக்கு வழிவகுக்கும் .
ALSO READ: குடல் ஆரோக்கியத்திற்கு அற்புதம் செய்யும் இயற்கை பானம் என்ன?
எலுமிச்சை ஜூஸை எப்போது குடிப்பது பாதுகாப்பானது..?
- சாப்பிட்ட 30 நிமிடங்களுக்குப் பிறகு அல்லது லேசான காலை உணவுக்கு பிறகு எப்போதும் எலுமிச்சை ஜூஸை குடிப்பது பாதுகாப்பானது.
- எலுமிச்சை ஜூஸை முதலில் வெதுவெதுப்பான நீரில் கலந்து, சிறிது தேன் அல்லது ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குடிக்கலாம்.
- உங்கள் பற்களைப் பாதுகாக்க, போதிய உணவு எடுத்துக்கொண்ட பிறகு குடிப்பது சிறந்ததாக இருக்கும்.
- எடை குறைப்பது ஒரு நல்ல விஷயம்தான். அதேநேரத்தில், உடல் எடையை குறைக்கும்போது நமது ஆரோக்கியத்தில் எந்த சமரசமும் செய்யக்கூடாது .
- வெறும் வயிற்றில் எலுமிச்சை தண்ணீர் குடிப்பது அனைவருக்கும் நல்லதல்ல. நீங்கள் தொடர்ந்து அதைக் குடித்து ஏதாவது அசௌகரியத்தை உணர்ந்தால், உடனடியாக ஒரு மருத்துவரை அணுகவும்.