Health Tips: உடலில் இந்த 5 அறிகுறிகள் தோன்றுகிறதா..? பக்கவாதம் வருவதற்கான சமிக்ஞை!
Early Warning Signs of Stroke: பக்கவாதம் திடீரென வந்தாலும், இது ஏற்படுவதற்கு முன்பு நமது உடல்கள் நமக்கு அறிகுறிகளை வழங்குகின்றன. அதன்படி, இதை ஆரம்பத்திலேயே அடையாளம் காண்பது மிகவும் முக்கியம். ஆரம்ப அறிகுறிகளை கண்டறிவதன்மூலம் உடனடி மருத்துவ சிகிச்சை அளித்தால் உயிர்களைக் காப்பாற்ற முடியும்.

பக்கவாதம்
உலகளவில் பக்கவாதம் (Stroke) என்பது மிக ஆபத்தானதாக மாறி வருகிறது. இந்த பக்கவாதத்திற்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரை பறிக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தும். பக்கவாதம் என்பது மூளையின் ஒரு பகுதிக்கு இரத்த ஓட்டம் (Blood Flow) திடீரென நிறுத்தப்படுவது அல்லது குறைவதாகும். பக்கவாதம் திடீரென வந்தாலும், இது ஏற்படுவதற்கு முன்பு நமது உடல்கள் நமக்கு அறிகுறிகளை வழங்குகின்றன. அதன்படி, இதை ஆரம்பத்திலேயே அடையாளம் காண்பது மிகவும் முக்கியம். ஆரம்ப அறிகுறிகளை கண்டறிவதன்மூலம் உடனடி மருத்துவ சிகிச்சை அளித்தால் உயிர்களைக் காப்பாற்ற முடியும். பக்கவாதத்திற்கு முந்தைய அறிகுறிகளில் திடீர் மற்றும் கடுமையான தலைவலி, முகம் அல்லது கைகால்களில் உணர்வின்மை, தெளிவற்ற பேச்சு, பார்வை மாற்றங்கள் மற்றும் சமநிலை இழப்பு ஆகியவை அடங்கும்.
பக்கவாதம் என்றால் என்ன..? அதன் அறிகுறிகள் என்ன..?
மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு இரத்த விநியோகம் திடீரென நிறுத்தப்படும்போது அல்லது குறையும்போது பக்கவாதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் மூளை செல்கள் இறக்க தொடங்குகின்றன. இதனால்தான் பக்கவாதத்திற்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. அதன்படி, பக்கவாதத்தின் ஆரம்ப 5 முக்கிய அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது.
ALSO READ: குழந்தைகளுக்கு இருமல் சிரப் கொடுக்கிறீர்களா..? கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்!
கடுமையான தலைவலி:
திடீரென்று வழக்கத்திற்கு மாறாக கடுமையான தலைவலியை அனுபவித்தால், நீங்கள் இதுவரை அனுபவித்த எதையும் போலல்லாமல், அது ஒரு தீவிர எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.
கைகால்களில் உணர்வின்மை:
முகம், கைகள் அல்லது கால்களில், குறிப்பாக உடலின் ஒரு பக்கத்தில் திடீரென கூச்ச உணர்வு அல்லது உணர்வின்மை ஏற்படலாம். இதோடு முகத்தின் ஒரு பக்கமும் இழுக்க தொடங்கும்.
பேசுவதில் சிரமம்:
திடீரெனப் பேசுவதில் சிரமம், பேச்சுத் தடுமாறுதல் அல்லது பேச்சுத் தெளிவின்மை ஏற்பட்டாலோ அல்லது சரியான வார்த்தைகளைக் கண்டுபிடிப்பதில் சிரமம் அல்லது திடீர் குழப்பம் ஏற்பட்டாலோ மருத்துவரிடம் செல்வது சிறந்தது.
பார்வையில் மாற்றங்கள்:
தெளிவான பார்வையில் இருந்து உங்களுக்கு மங்கலான பார்வை ஏற்பட்டாலோ அல்லது உங்களுக்கு அனைத்து காட்சிகளும் இரட்டையாக தெரிந்தாலோ இதன் அறிகுறிகளில் ஒன்றாகும்.
சமநிலை இழப்பு:
திடீரென சமநிலை இழப்பு, நடப்பதில் சிரமம் அல்லது தலைச்சுற்றல் போன்றவையும் இதற்கான காரணங்களாக இருக்கலாம்.
ALSO READ: உடலில் இரும்புச்சத்து குறைவா..? சரி செய்ய உதவும் சைவ உணவுகள்!
சப்அரக்னாய்டு ரத்தக்கசிவு:
கடுமையான தலைவலிக்கு ஒரு தீவிர காரணமாக இருக்கலாம்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள கடுமையான தலைவலி, மூளையில் இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான எச்சரிக்கை அறிகுறியாகவும் இருக்கலாம். இந்த நிலை பெரும்பாலும் மூளை அனீரிஸம் (தமனியின் பலவீனமான சுவரில் பலூன் போன்ற வீக்கம்) சிதைவதால் ஏற்படுகிறது. இந்த அனீரிஸம் சிதைந்தால், அது மூளையில் கடுமையான இரத்தப்போக்கை ஏற்படுத்துகிறது. இந்த முறிவு கழுத்து விறைப்பு மற்றும் கண் இயக்கத்தில் சிரமம் போன்ற பிற கடுமையான அறிகுறிகளையும் ஏற்படுத்தும்.
உங்களுக்கோ அல்லது உங்களைச் சுற்றியுள்ளவருக்கோ மேற்கண்ட அறிகுறிகள் ஏதேனும் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரைத் தொடர்புகொள்வது அல்லது நேரத்தை வீணாக்காமல் நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது ஒரு உயிர்காக்கும்.