Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Health Tips: சாப்பிட்ட பிறகும் அடிக்கடி பசிக்கிறதா? காரணம் என்ன? மருத்துவர் சிவசுந்தர் விளக்கம்!

Hungry Frequently: மாவிலிருந்து தயாரிக்கப்படும் சில உணவுகள் கார்போஹைட்ரேட்டுகள் சார்ந்த உணவுகள் சாப்பிட்ட பிறகு அடிக்கடி பசி எடுக்கும். ஏனெனில் அவற்றில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைவாக உள்ளன. இந்த குறைந்த நார்ச்சத்து உணவு வேகமாக ஜீரணமாகி பசியை ஏற்படுத்துகிறது.

Health Tips: சாப்பிட்ட பிறகும் அடிக்கடி பசிக்கிறதா? காரணம் என்ன? மருத்துவர் சிவசுந்தர் விளக்கம்!
மருத்துவர் சிவசுந்தர்Image Source: Freepik and instagram
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 22 Nov 2025 19:22 PM IST

சிலர் சிறிது நேரத்திற்கு முன்புதான் வயிறு நிறைய சாப்பிட்டு இருப்பார்கள். ஆனால், சிறிது நேரத்திலேயே அவர்களுக்கு பசி எடுக்க தொடங்கிவிடும். அவ்வப்போது பசி அல்லது திடீர் பசி ஏற்படுவது இயல்பானது என்றாலும், ஒருவருக்கு நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் பசி (Hungry) எடுப்பது பிரச்சனை என்பதை உணர வேண்டும். இது போன்று உங்களுக்கும் மீண்டும் மீண்டும் பசி எடுத்தால், அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதிகப்படியான பசி சில நோயின் அறிகுறியாக இருக்கலாம். அந்தவகையில், ஒருவருக்கு மீண்டும் மீண்டும் ஏன் பசி எடுக்கிறது? அதை எப்படி ஆரோக்கியமாக (Healthy) சரி செய்வது என்பது பற்றி மருத்துவர் சிவசுந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அடிக்கடி பசி எடுக்க காரணம் என்ன..?

போதுமான அளவு புரதம்:

மாவிலிருந்து தயாரிக்கப்படும் சில உணவுகள் கார்போஹைட்ரேட்டுகள் சார்ந்த உணவுகள் சாப்பிட்ட பிறகு அடிக்கடி பசி எடுக்கும். ஏனெனில் அவற்றில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைவாக உள்ளன. இந்த குறைந்த நார்ச்சத்து உணவு வேகமாக ஜீரணமாகி பசியை ஏற்படுத்துகிறது. அதன்படி, நீங்கள் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளும்போது நீண்ட நேரம் உங்கள் உணவை நிறைவாக வைத்திருக்கும். ஒரு உணவிற்கு குறைந்தது 20 கிராம் என காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என புரத அளவை எடுத்து கொள்ளுங்கள். காலையில் எழுந்ததும் 2 முழு வேகவைத்த முட்டைகளை சாப்பிடுவது பசியைக் கட்டுப்படுத்துவதில் மிகப்பெரிய அளவில் உதவி செய்யும்.

ALSO READ: கர்ப்ப காலத்தில் பெண்கள் என்ன செய்யலாம்..? மருத்துவர் நான்சி அட்வைஸ்..!

அதிக கார்ப், சர்க்கரை உணவுகளைத் தவிர்க்கவும்:

இட்லி, தோசை, சப்பாத்தி, இனிப்புகள் போன்ற உணவுகள் சர்க்கரை அதிகரிப்பையும் மோசத்தையும் ஏற்படுத்துகின்றன, இதனால் மீண்டும் பசி ஏற்படுகிறது. இதை தவிர்க்க நீங்கள் சாப்பிடும் தட்டில் நார்ச்சத்து + புரதம் + ஆரோக்கியமான கொழுப்புகள் என சம அளவிலான ஊட்டச்சத்துக்களை எடுத்து கொள்ளுங்கள்.

நீரேற்றமாக இருங்கள்:

சில நேரங்களில் சிலருக்கு தாகத்திற்கு பசிக்கும் இடையிலான உணர்வுகளுக்கே வித்தியாசம் தெரியாது. அதன்படி, நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது முக்கியம். உங்களுக்கு அடுத்த முறை பசி எடுக்கும் போது, ​​முதலில் தண்ணீர் குடித்து பசியாற்ற பழங்குங்கள்.

தூக்கம், மன அழுத்தம் & ஹார்மோன்கள்:

கிரெலின் எனப்படும் பசியின்மை ஹார்மோன்கள், நமது மூளையில் பசி உணர்வைக் கட்டுப்படுத்துகின்றன. இருப்பினும், தூக்கமின்மை நம் வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது அடிக்கடி பசி வேதனையை ஏற்படுத்தும்.

ALSO READ: அந்துருண்டை குழந்தைகளுக்கு இவ்வளவு ஆபத்தானதா? மருத்துவர் அருண்குமார் விளக்கம்!

கர்ப்பம் & தைராய்டு பிரச்சினைகள்

கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு இயற்கையாகவே பசியை அதிகரிக்கும். உங்களுக்கு ஹைப்பர் தைராய்டிசம் இருந்தால், உங்கள் வளர்சிதை மாற்றம் வேகமடைந்து, உடனடி பசியை ஏற்படுத்துகிறது.