Health Tips: 16 மணிநேர உண்ணாவிரதம் சரியா? தவறா? மருத்துவர் சந்தோஷ் ஜேகப் விளக்கம்!
16 Hours Fasting: 16 மணிநேரம் உண்ணாவிரதம் என்பது பட்டினி கிடப்பதில்லை, ஆனால் புத்திசாலித்தனமாக சாப்பிடும் நேரம் வளர்சிதை மாற்றத்தையும் ஆற்றலையும் அதிகரிக்கும் ஒரு உணவு முறையாகும். இந்த 16 மணிநேர உண்ணாவிரதத்தின் போது பகலில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு சாப்பிட்டுவிட்டு, மீதமுள்ள நேரத்தில் முழுமையாக உண்ணாவிரதம் இருப்பதைக் குறிக்கிறது.
பலரும் உடல் எடையை குறைக்க (Weight Loss) வேண்டும் என்பதற்காக 8 மணி நேரத்திற்குள் சாப்பிட்டுவிட்டு மீதமுள்ள 16 மணிநேரம் சாப்பிடாமல் (16 Hours Fasting) இருக்கிறார்கள். மேலும் சிலர் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த அல்லது தங்கள் உடலை நச்சு நீக்க ஒரு வழியாகவும் இதை பார்க்கிறார்கள். இருப்பினும், அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் வெளியிட்ட ஒரு ஆய்வின்படி , உணவு நேரத்தை ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்திற்கு மட்டும் கட்டுப்படுத்துவது இதய நோயால் இறக்கும் அபாயத்தை 91 சதவீதம் அதிகரிக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தநிலையில், 16 மணிநேரம் உண்ணாவிரதம் என்றால் என்ன..? அது நம் ஆரோக்கியத்தை பாதிக்குமா இல்லையா என்பதை மருத்துவர் ஜேகப்பும், மருத்துவர் நிவ்யாழினி விளக்கம் அளித்துள்ளனர்.
16 மணிநேரம் உண்ணாவிரதம் என்றால் என்ன..?
16 மணிநேரம் உண்ணாவிரதம் என்பது பட்டினி கிடப்பதில்லை, ஆனால் புத்திசாலித்தனமாக சாப்பிடும் நேரம் வளர்சிதை மாற்றத்தையும் ஆற்றலையும் அதிகரிக்கும் ஒரு உணவு முறையாகும். இந்த 16 மணிநேர உண்ணாவிரதத்தின் போது பகலில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு சாப்பிட்டுவிட்டு, மீதமுள்ள நேரத்தில் முழுமையாக உண்ணாவிரதம் இருப்பதைக் குறிக்கிறது. சிலர் 12 மணி நேரம் சாப்பிட்டு 12 மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கிறார்கள், மற்றவர்கள் 10 மணி நேர “சாப்பிடும் நேரத்தை” தேர்வு செய்கிறார்கள். மிகவும் பரவலாக விவாதிக்கப்படும் முறை 16:8 முறை, இதில் மக்கள் 16 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து 8 மணி நேரத்தில் மட்டுமே சாப்பிடுகிறார்கள்.




16 மணிநேர உண்ணாவிரதத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள்:
View this post on Instagram
நன்மைகள்:
- எடையைக் குறைக்கலாம்
- இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது
- வீக்கத்தைக் குறைக்கலாம்
- சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவுகள் மேம்படக்கூடும்.
தீமைகள்:
- ஊட்டச்சத்து குறைபாடு
- எரிச்சல் மற்றும் தலைவலி
- அதிகப்படியான பசி மற்றும் சோர்வு
16 மணிநேரம் உண்ணாவிரத்தை பின்பற்றும்போது பின்பற்ற வேண்டியவை:
நீரேற்றத்தைத் தவிர்க்காதீர்கள்:
உண்ணாவிரத நேரங்களில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது நீரிழப்புக்கு வழிவகுக்கும், அரித்மியா அல்லது இதயப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
8 மணிநேரத்தில் ஆரோக்கிய உணவு:
8 மணிநேரத்தில் நீங்கள் சாப்பிடும்போது புத்திசாலித்தனமாக சாப்பிடுவது மிக முக்கியமானது. அதன்படி, சமச்சீரான, சத்தான உணவை உறுதி செய்யுங்கள். அதேநேரத்தில், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடாதீர்கள்.
ALSO READ: குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா..? டாக்டர் ஹரிணி ஸ்ரீ விளக்கம்!
16 மணிநேர உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முன் செய்ய வேண்டிய விஷயம்:
நீங்கள் முதல்முறையாக 16 மணிநேர உண்ணாவிரதத்தை பின்பற்ற போகிறீர்கள் என்றால், உங்களுக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகள் இருக்கிறதா என்பது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொள்வது நல்லது.
நாள் முழுவதும் நீரேற்றமாக இருங்கள்:
விரதம் இல்லாத நேரங்களில் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது முக்கியம். இது பாதுகாப்பான உண்ணாவிரதத்திற்கு முக்கியமாகும்.
சரியான முறையில் பின்பற்றினால் நல்லது:
சரியான முறையில் மேற்கொள்ளும்போது, 16 மணிநேர உண்ணாவிரதம் பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளதாக இருக்கும்.