Health Tips: மீதமுள்ள டீயை மீண்டும் சூடுபடுத்தி குடிப்பீர்களா..? இது இவ்வளவு பிரச்சனையை தரும்!
Reheating Tea: டீயை நீண்ட நேரம், உதாரணமாக 4 மணி நேரத்திற்கு மேலாக அப்படியே விடுவது, பல பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் டீக்குள் நுழையக்கூடும். டீயை மீண்டும் மீண்டும் சூடாக்குவது அதன் சுவையை மாற்றுவது மட்டுமல்லாமல், அனைத்து நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்களையும் நீக்குகிறது.

டீ (Tea) என்பது இந்தியர்களின் மிகவும் விருப்பமான பானமாகும். இது இந்தியாவின் அதிகாரப்பூர்வமற்ற தேசிய பானம் என்றே சொல்லலாம். பாலில் தயாரிக்கப்படும் டீயின் மீது மிகுந்த மோகம் இருப்பதால், பலர் காலையில் (Morning) எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அதை குடிக்கிறார்கள். காலையில் டீயை பலரும் அதிகளவில் போட்டு வைத்துவிடுகிறார்கள். இதை மீண்டும் மீண்டும் சூடு செய்து மாலை வரை குடிக்கிறார்கள். நீங்கள் அடிக்கடி டீயை சூடு செய்து குடித்தா, இது உங்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பது தெரியுமா..? அந்தவகையில், டீயை மீண்டும் மீண்டும் சூடாக்கிய பிறகு ஏன் குடிக்கக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
ஊட்டச்சத்துக்களும் சுவையும் மறையும்:
டீ காய்ச்சிய பிறகு, இதை மீண்டும் சூடுபடுத்துவதன் மிகப்பெரிய குறைபாடு என்னவென்றால், அது அதன் சுவை மற்றும் நறுமணத்தை முற்றிலுமாக அழித்துவிடும். மேலும், டீயை மீண்டும் சூடுபடுத்துவது அதன் ஊட்டச்சத்துக்களையும் முற்றிலுமாக அழித்துவிடும்.
ALSO READ: ஒருவாரம் தொடர்ந்து ஒரே பாட்டிலில் தண்ணீர் குடிக்கலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?




இந்த நோய் வருவதற்கான ஆபத்து:
நீங்கள் டீயை மீண்டும் மீண்டும் சூடாக்கி குடிக்கும்போது, அதன் அனைத்து நன்மை பயக்கும் பண்புகள் மற்றும் சேர்மங்களை அது நீக்குகிறது. இது சுவையற்றதாக மட்டுமல்லாமல், உங்கள் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். மீண்டும் மீண்டும் சூடாக்கி குடிக்கும் டீ வயிற்றுப்போக்கு, வாந்தி, பிடிப்புகள் மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, சூடாக்கி டீ குடிப்பதைத் தவிர்ப்பது முக்கியம்.
டானின்கள் வெளியீடு:
டீயை குடிப்பதே அதன் சுவையை அதிகளவில் ருசிக்கதான். இருப்பினும், டீயை நீண்ட நேரம் ஊறவைத்து, பின்னர் சூடாக்கும் போது டானின்கள் வெளியேறி, கசப்பான சுவையை ஏற்படுத்தும். இது உங்கள் வாயை விரும்பத்தகாததாக உணர வைக்கும்.
நுண்ணுயிர் வளர்ச்சி:
டீயை நீண்ட நேரம், உதாரணமாக 4 மணி நேரத்திற்கு மேலாக அப்படியே விடுவது, பல பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் டீக்குள் நுழையக்கூடும். டீயை மீண்டும் மீண்டும் சூடாக்குவது அதன் சுவையை மாற்றுவது மட்டுமல்லாமல், அனைத்து நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்களையும் நீக்குகிறது.
பெரும்பாலான இந்தியர்கள் பெரும்பாலும் பால் டீயை உட்கொள்கிறார்கள். இது நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கு ஆளாகிறது. மேலும், நீங்கள் மூலிகை டீயை சூடாக்கி குடித்தால், அது அதன் அனைத்து நன்மை பயக்கும் பண்புகளையும் இழக்கிறது. எனவே, அதிக நேரம் டீயை சேமித்து வைப்பதைத் தவிர்க்கவும், அதை சூடாக்க வேண்டாம்.
ALSO READ: காலை உணவில் தவறாமல் இது இடம்பெறுமா..? இதய நோய் பிரச்சனை உண்டாகலாம்!
டீயை எப்போது சூடுபடுத்தலாம்..?
டீ போட்ட 15 நிமிடங்களுக்குப் பிறகு அதை மீண்டும் சூடாக்கலாம். ஏனெனில் அது இன்னும் நச்சுத்தன்மையற்றதாக இருக்கலாம். மேலும், 4 மணி நேரத்திற்கும் மேலாக போட்டு வைக்கப்பட்ட டீயை ஒருபோதும் மீண்டும் சூடுபடுத்த வேண்டாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும், ஏனெனில் அது மிகவும் தீங்கு விளைவிக்கும்.