Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆப்பிள் உடலுக்கு நல்லது தான் … அதன் பக்கவிளைவுகள் பற்றி தெரியுமா?

Apple Overeating Side Effects : ஆப்பிள் உடலுக்கு பல நன்மைகள் கொண்டதாக இருந்தாலும், அதிகமாக சாப்பிடுவது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சிலருக்கு ஒவ்வாமை பிரச்னையை ஏற்படுத்தும். இந்த கட்டுரையில் அதிக அளவு ஆப்பிள்களை சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து பார்க்கலாம்.

ஆப்பிள் உடலுக்கு நல்லது தான் … அதன் பக்கவிளைவுகள் பற்றி தெரியுமா?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 05 Jul 2025 23:28 PM

ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் (Apple) சாப்பிட்டால், உங்களுக்கு ஒருபோதும் மருத்துவர் தேவையில்லை என்ற பழமொழி மிகவும் பிரபலம். அதற்கு காரணம் ஆப்பிளில் உடலுக்கு தேவையான அனைத்து நன்மைகளும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து (Fiber) செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. இது அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளை சரி செய்யும்.  இருப்பினும் இவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கும் ஆப்பிளில் சில பிரச்னைகளும் இருக்கின்றன. அதிகப்படியான ஆப்பிள்களை சாப்பிடுவதால் சில தீமைகள் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சில பக்கவிளைவுகள் (Side Effects) ஏற்படுவதாக கூறப்படுகிறது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

அளவுக்கு அதிகமாக ஆப்பிளை சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்னைகள்

ஆப்பிள்கள் உடல் நலத்திற்கு நல்லது. ஆனால் அதிகமாக சாப்பிடுவது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். அதிகப்படியான ஆப்பிள் சாப்பிடுவது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். குறிப்பாக தடிப்புகள், வீக்கம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். ஆப்பிள்களில் இயற்கை சர்க்கரைகள் உள்ளன. இவற்றை அதிகமாகச் சாப்பிடுவதால் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். ஆப்பிள்கள், குறிப்பாக ஜூஸ் வடிவில் உட்கொண்டால், இரத்த சர்க்கரையை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம்.

அதிகமாக ஆப்பிள் சாப்பிடுவது வாயு, வீக்கம், உடலில் தடிப்புகள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். பூச்சிக்கொல்லிகள் அதிகமாக பயன்படுத்தப்பட்ட ஆப்பிள்களை சாப்பிடுவது சில உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும். அதனால் அதனை எப்பொழுதும் தோலை நீக்கிய பிறகே சாப்பிடுவது நல்லது.

பல் பிரச்னையை ஏற்படுத்தும்

ஆப்பிளில் உள்ள அமிலங்கள் பல் எனாமலை அழிக்கின்றன. இது பல் சொத்தைக்கு வழிவகுக்கிறது. இதில் உள்ல அமிலங்கள் காரணமாக வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிடுவது சிலருக்கு அஜீரண கோளாாரை ஏற்படுத்தும்.

ஆப்பிள் சாப்பிட்ட உடனேயே வாயைக் கொப்பளிக்க வேண்டும், இல்லையெனில் பல் பிரச்னைகள் வரலாம் என்று சொல்கிறார்கள். சிலருக்கு ஆப்பிள்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். உங்களுக்கும் இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தால், சாப்பிடாமல் இருப்பது நல்லது. ஒரு நாளைக்கு ஒன்று மட்டும் எடுத்துக்கொள்வது நல்லது. ஆப்பிள்களில் கலோரிகள் அதிகம். இருப்பினும் அதிக அளவில் சாப்பிட்டால், அதில் உள்ள இனிப்பு காரணமாக உடல் எடையை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து நல்லது தான் என்றாலும், சிலருக்கு வாயு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

ஆப்பிள் உண்மையில் ஒரு சத்தான பழம் தான் என்றாலும், அதை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது சில உடல்நலப் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். ஒவ்வாமை இருப்பவர்கள் ஆப்பிளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9 Tamil பொறுப்பேற்காது.)