Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Mosquito-Borne Diseases: கொசுக்களால் பரவும் நோய்கள்.. அறிகுறிகள் என்ன..? தடுப்பது எப்படி..?

Deadly Mosquito Diseases: கொசுக்கள் பல ஆபத்தான நோய்களைப் பரப்புகின்றன, அவற்றில் டெங்கு, சிக்குன் குனியா, ஜிகா, மஞ்சள் காமாலை, மேற்கு நைல் வைரஸ் மற்றும் ரிஃப்ட் வேலி காய்ச்சல் ஆகியவை அடங்கும். பல நோய்களுக்கு இன்னும் சிகிச்சை இல்லை. எனவே, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியம்.

Mosquito-Borne Diseases: கொசுக்களால் பரவும் நோய்கள்.. அறிகுறிகள் என்ன..?  தடுப்பது எப்படி..?
கொசு கடிImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 24 Aug 2025 20:07 PM

மழைக்காலத்தில் மிகப்பெரிய தொல்லையாக இருப்பது கொசு. பூமியில் உள்ள சில கொடிய நோய்களின் பரப்பிகளில் கொசு (Mosquito) முக்கியமானது. ஒவ்வொரு ஆண்டு மில்லியன் கணக்கான மக்கள் கொசுக்களால் பரவும் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், பல கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். பூமியில் உள்ள சில நோய்களுக்கான தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை உருவாக்குவதில் அறிவியல் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், கொசுக்களால் பரவும் பல நோய்களுக்கு மருந்துகள் (Medicine) கண்டுபிடிக்கவில்லை. அதன்படி, தடுப்பு மற்றும் ஆரம்பகால கட்டுப்பாடு மட்டுமே இவற்றின் விளைவுகளை குறைப்பதற்கான வழிகளாகும்.

மருந்து இல்லாத கொசுக்களால் பரவும் நோய்கள்:

டெங்கு காய்ச்சல்:

உலகின் மிக வேகமாக பரவும் கொசுக்களால் பரவும் தொற்றுகளில் டெங்கு காய்ச்சல் ஒன்று. இது அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, மூட்டு மற்றும் தசை வலி ஏற்படும். எப்போதாவது, உயிருக்கு ஆபத்தான டெங்கு ரத்தக்கசிவு ஏற்படுத்துகிறது. டெங்கு காய்ச்சலுக்கு பிரத்யேக மருந்து என்பது கிடையாது. அதன்படி திரவங்கள், ஓய்வு மற்றும் காய்ச்சலுக்கான மருந்து போன்ற துணை சிகிச்சைகளை கொண்டு சரி செய்யலாம். டெங்கு வராமல் தடுக்க கொசுக்கள் மற்றும் கொசு இனப்பெருக்கம் ஆகியவற்றிலிருந்து விலகி இருப்பதுதான்.

ALSO READ: மழைக்காலத்தில் அதிகரிக்கும் கொசு தொல்லை.. குழந்தைகளுக்கு கொசு மருந்து பயன்படுத்தலாமா..?

சிக்குன் குனியா:

ஏடிஎஸ் எஜிப்டி கொசுவால் பரவும் சிக்குன்குனியா, திடீர் காய்ச்சல், கடுமையான மூட்டு வலியை தரும். மேலும் சொறி, தசை வலி மற்றும் பலவீனம் போன்றவையும் உண்டாகும். சிக்குன் குனியாவை தடுக்க வைரஸ் தப்பு மருந்து அல்லது சிகிச்சை எதுவும் இல்லை. எனவே, கொசுவில் இருந்து தள்ளி இருப்பதே சிக்குன் குனியா வராமல் தடுக்க முடியும்.

ஜிகா வைரஸ்:

ஜிகா வைரஸ் தொற்றுகள் பொதுவாக லேசானவை. ஆனால், கர்ப்பிணி பெண்களுக்கு பெரியளவில் பாதிப்பை தரும். இது குழந்தைகளுக்கு மைக்ரோசெபலி போன்ற பிறப்பு குறைபாடுகளை தரும். ஜிகா வைரஸூக்கு தற்போது தடுப்பூசி அல்லது சிகிச்சை எதுவும் இல்லை. ஓய்வு, திரவ உட்கொள்ளல் மற்றும் மருந்துகளை உட்கொள்வது உள்ளிட்ட துணை சிகிச்சையை இதற்கு உதவி செய்யும்.

மஞ்சள் காமாலை:

மஞ்சள் காமாலை ஏடிஸ் கொசுக்களால் பரவுகிறது. இதற்கு காயச்சல், தசை வலி, குமட்டல் மற்றும் மஞ்சள் கண்கள் மற்றும் தோல் மஞ்சள் நிறமாக மாறுதல் ஆகியவை ஆகும். மஞ்சள் காமாலைக்கு எந்த சிகிச்சையும் இல்லை. இருப்பினும், ஒரு நோய்த்தடுப்பு தடுப்பூசி உள்ளது.

மேற்கு நைல் வைரஸ்:

மேற்கு நைல் வைரஸ் கியூலெக்ஸ் கொசுக்களால் பரவுகிறது. இது காய்ச்சல், உடல் வலி மற்றும் நரம்பியல் நோய்களை ஏற்படுத்தக்கூடும். மேற்கு நைல் வைரஸூக்கு எந்த சிகிச்சையோ அல்லது தடுப்பூசியோ கிடையாது. பெரும்பாலான நோயாளிகள் சரியான ஓய்வு மூலமே குணமடைகிறார்கள். இந்த நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.

ALSO READ: வலி நிவாரணிகளால் ஏற்படும் சிறுநீரக பாதிப்புகள்.. இவற்றை சரியாக எப்படி கையாள்வது..?

ரிஃப்ட் வேலி காய்ச்சல்:

ரிஃப்ட் வேலி காய்ச்சல் விலங்குகளை பாதிக்கும். இருப்பினும், கொசு கடித்தல் மூலமாகவும் மனிதர்களை பாதிக்கலாம். லேசான காய்ச்சல் மர்றும் பலவீனம் முதல் கடுமையான கல்லீரல் பாதிப்பு மற்றும் கண் பிரச்சினைகள் வரை உண்டாகும்.

மனிதர்களில் ரிஃப்ட் வேலி காய்ச்சலுக்கு எந்த சிகிச்சையும் இல்லை. கொசு கட்டுப்பாடு, பராமரிப்பு மூலம் இதிலிருந்து விலகி இருக்கலாம்.

கொசுக்களால் பரவும் நோய்களிலிருந்து உங்களை பாதுகாப்பது எப்படி..?

  • கொசு விரட்டிகளை பயன்படுத்துதல், முழு கை ஆடைகளை அணியுங்கள்.
  • அதிக ஆபத்துள்ள பகுதிகளில் கொசு வலைகளுக்கு அடியில் தூங்குங்கள்
  • கொசுக்கள் உற்பத்தியாகும் இடத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றவும்.
  • மஞ்சள் காமாலை போன்ற தடுப்பூசிகள் உள்ள இடங்களில் தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள்.

கொசுக்களால் பரவும் நோய்களுக்கு பலவற்றிற்கு இன்னும் சிகிச்சை இல்லை. விழிப்புடன் இருப்பதன்மூலமும், கொசு கடியிலிருந்து உங்களை பாதுகாத்து கொள்வதன் மூலமும், உங்களுக்கு நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம்.