யூத் பட வெற்றி.. சிவகார்த்திகேயனுடன் கொண்டாடிய கென் கருணாஸ் – வைரலாகும் வீடியோ!

Ken karunaas And Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் இயக்குநராக மற்றும் நடிகராக யூத் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் கென் கருணாஸ். இந்த படமானது வெளியாகி கிட்டத்தட்ட 50 நாட்களை கடந்த நிலையில், இப்படத்தின் வெற்றியை சிவகார்த்திகேயனுடன் கேக் வெட்டி, கென் கருணாஸ் கொண்டாடியுள்ளார்.

யூத் பட வெற்றி.. சிவகார்த்திகேயனுடன் கொண்டாடிய கென் கருணாஸ் - வைரலாகும் வீடியோ!

கென் கருணாஸ் மற்றும் சிவகார்த்திகேயன்

Updated On: 

08 May 2026 16:05 PM

 IST

கோலிவுட் சினிமவில் கடந்த 2026 மார்ச் 19ம் தேதியில் வெளியாகி, சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த திரைப்படம்தான் யூத் (Youth). இந்த படத்தை நடிகரும், இயக்குநருமான அறிமுகமாகியுள்ள கென் கருணாஸ் (Ken Karunaas) இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தில் கென் கருணாஸ் பிரவீன் என்ற பள்ளி மாணவனாக நடித்திருந்த நிலையில், மூன்று நடிகைகள் இணைந்து ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படமானது வித்தியாசமான பள்ளி மற்றும் மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் மத்தியில் சிறப்பாக வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படமானது திரையரங்குகளில் வெளியாகி கிட்டத்தட்ட ரூ 85 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. அந்த வகையில் தற்போது ஓடிடியிலும் (OTT) வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது.

இப்படமானது வெளியாகி கிட்டத்தட்ட 50 நாட்களை கடந்த நிலையில், சிவகார்த்திகேயனுடன் (Sivakarthikeyan) கென் கருணாஸ் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ, தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: சமூக வலைதளத்தில் மூழ்கடிக்கப்படும் சமூகம்… காதலை முடிவு செய்யும் மீட்டர்… ஓடிடியில் வெளியாகி உள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் விமர்சனம் இதோ

சிவகார்த்திகேயனுடன் யூத் பட வெற்றியை கொண்டாடிய கென் கருணாஸ் குறித்த வீடியோ:

இந்த் வீடியோவில் கென் கருணாஸ், கேக் வெட்டி அதை சிவகார்த்திகேயனுக்கு ஊட்டிவிடும்படியாக அமைந்துள்ளது. மேலும் சிவகார்த்திகேயனும் யூத் பட வெற்றியை கென் கருணாஸுடன் சிறப்பாக கொண்டாடியது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. தற்போது சிவகார்த்திகேயன் சேயோன் என்ற படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் நிலையில், மேலும் அடுத்த படங்களுக்காக கதைகளையும் கேட்டுவருகிறார்.

இதையும் படிங்க: சந்தானத்தின் புதுப் படத்தின் டைட்டில் லவ் பைட் – தயாரிப்பாளர் வெளியிட்ட அப்டேட்

யூத் பட வெற்றியை தொடர்ந்து கென் கருணாஸ், தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதில் வட சென்னை ராஜனின் சிறுவயது கதாபாத்திரத்தில் கென் கருணாஸ் நடிக்கவுள்ளதாக வட்டாரங்கள் கூறுகிறது. இப்படத்தை அடுத்ததாக கென் கருணாஸின் மீண்டும் இயக்குநராக மற்றும் ஹீரோவாக ஒரு படத்தை செய்யவிருக்கிறாராம். அந்த படமானது கல்லூரி வாழ்க்கையை பற்றிய கதைக்களத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த படமும் யூத் படம் போன்று இவருக்கு வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி