மூணு வேளை சோத்துக்கு நாம படுற பாடு இருக்கே… சர்க்கார் பட ஷூட்டிங்கில் பேசிய விஜய் – ஓபனாக சொன்ன யோகி பாபு

Actor Yogi Babu shares interesting information about Thalapathy Vijay: தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

மூணு வேளை சோத்துக்கு நாம படுற பாடு இருக்கே... சர்க்கார் பட ஷூட்டிங்கில் பேசிய விஜய் - ஓபனாக சொன்ன யோகி பாபு

விஜய் மற்றும் யோகி பாபு

Published: 

09 Mar 2026 18:14 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியன படம் சர்க்கார். இந்தப் படத்தை பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இயக்கி இருந்தார். மேலும் நடிகர் தளபதி விஜய் நாயகனாக நடித்து இருந்த இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, பழ. கருப்பையா, யோகி பாபு, ராஜேஷ், லிவிங்ஸ்டன், துளசி, கல்யாணி நடராஜன், பிரேம், பாப்ரி கோஷ், ரஞ்சினி ஹரிஹரன், யுவினா பார்த்தவி, ஆறுமுகம் பாலா, எம்.ஜே. ஸ்ரீராம், ஜானகி, ஜெயதித்ய காங், கனிஷ்க், மான்யா, கே. சிவசங்கர், எஸ்.எஸ்.ஸ்டான்லி, அஸ்வந்த் திலக், ரனீஷ், அப்பல்லோ ரவி, மீனு, அலோக் நாத், ஈசிஆர் சரவணன், செல்வா, பாலசுப்ரமணி, லல்லு, எலிசா எர்ஹார்ட், ராஜா ராணி பாண்டியன், வினோத், ஏ.ஆர்.முருகதாஸ், சிம்ரன் குப்தா என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரித்து இருந்தார். மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் பட்த்தில் நடித்த சம்பவம் குறித்து யோகி பாபு பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் நானும் விஜய் சாரும் கலகலனு பேசிப்போம்:

அதன்படி யோகி பாபு அளித்தப் பேட்டியில் அவர் கூறியதாவது, விஜய் சார் மிகவும் பஞ்சுவலான ஆள். டைம்க்கு எல்லாம் பண்ணிடுவார். டயால்ல இருந்து டான்ஸ் வரை அவர் மிகவும் குறுகிய நேரம் மட்டும் தான் ப்ராக்டிஸ் பண்ணுவார். அப்படி சர்கார் படத்தின் ஷூட்டிங்கில் அவர் பாடலுக்கு நடனமாடும் போது அது சிங்கிள் ஷாட். சௌபி மாஸ்டர்தான் கோரியோ செய்தார். அந்த நேரத்தில் விஜய் சார் அத ரொம்ப சீக்கிரமாவே ஆடிட்டு வந்துட்டார். வந்து என் கைய பிடிச்சுட்டுதான் நின்னாரு. நானும் என்னனாண்ணா இப்படி ஆடிட்டீங்க சூப்பரா இருந்தது என்று சொன்னேன்.

Also Read… தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஒரு இன்பச் செய்தி.. ஜன நாயகன் படத்தில் ரிலீஸில் திருப்பம்!

உடனே அவரு என் முட்டிய பாருடா என்றார். நானும் கை வைச்சு பார்த்தா அவருக்கு கடகடனு முட்டி ஆடுது. அப்போதான் சிரிச்சிட்டே சொன்னாரு மூணுவ் வேளை சோத்துக்கு நாம என்னெல்லாம் பண்ண வேண்டி இருக்கு என்று விஜய் கூறியதாக யோகி பாபு அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார். இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… இந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் யாருனு தெரியுதா? பலமுறை மணிரத்னம் மற்றும் சங்கர் படத்தில் இணைந்து நடித்த நடிகர்தான் இவர்!

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..