பராசக்தி படத்திலிருந்து இன்று மாலை வெளியாகிறது ‘வேர்ல்ட் ஆஃப் பராசக்தி’ வீடியோ
World Of Parasakthi Video: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் பராசக்தி. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் வேர்ல்ட் ஆஃப் பராசக்தி என்ற சிறப்பு வீடியோவை படக்குழு இன்று மாலை வெளியிடுகிறது.

Parasakthi
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் மதராஸி. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இயக்கிய இந்தப் படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் வசூலில் 100 கோடியைக் கடந்தது. வசூலி 100 கோடியைக் கடந்தாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேறபிப் பெறவில்லை. இந்த நிலையில் இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் பராசக்தி. பீரியட் ட்ராமாவாக உருவாகி உள்ள இந்தப் படத்தை இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடிகர்கள் ரவி மோகன், ஸ்ரீ லீலா, அதர்வா முரளி, பேசில் ஜோசஃப், ராணா டகுபதி என பலர் இந்தப் படத்தின் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் இந்தி எதிர்ப்பு கொள்கையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இதில் அதிக அளவில் இந்தி எதிர்ப்பு குறித்து பேசியது காரணமாக இந்த படத்தை மறு தணிக்கைக்கு அனுப்ப தணிக்கை குழு அறிவுறுத்தியது காரணமாக மீண்டும் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் படம் வருகின்ற ஜனவரி மாதம் 10-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் இந்தப் படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இன்று மாலை வெளியாகிறது ‘வேர்ல்ட் ஆஃப் பராசக்தி’ வீடியோ:
இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற 3-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு நடைபெறும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் படத்தில் இருந்து வோர்ல்ட் ஆஃப் பராசக்தி என்ற சிறப்பு வீடியோவை பராசக்தி படக்குழு இன்று மாலை வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Also Read… தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகருடன் கூட்டணி வைத்த லோகேஷ் கனகராஜ்? வைரலாகும் தகவல்
பராசக்தி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
And those who missed it…
🎥 #WorldOfParasakthi video drops today at 6 PM 🔥#ParasakthiFromPongal#ParasakthiFromJan10@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash @DawnPicturesOff @redgiantmovies_ @Aakashbaskaran @sreeleela14 @saregamasouth… pic.twitter.com/4FqNzNTxpD— DawnPictures (@DawnPicturesOff) December 28, 2025
Also Read… 2025-ல் வசூலில் மாஸ் காட்டிய அஜித்குமார் மற்றும் ரஜினிகாந்த்!