ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது வித் லவ் படக்குழு… வைரலாகும் பதிவு

With Love Movie OTT Update: தமிழ் சினிமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு வெளியான படம் வித் லவ். இந்தப் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது வித் லவ் படக்குழு... வைரலாகும் பதிவு

வித் லவ்

Published: 

03 Mar 2026 12:31 PM

 IST

தமிழ் சினிமாவில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் வித் லவ் (With Love Movie). ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவான இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இந்தப் படத்தில் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் (Director And Actor Abishan Jeevinth) நாயகனாக அறிமுகம் ஆகி இருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை அனஸ்வரா ராஜன் நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் காவ்யா அனில், ஹரிஷ் குமார், ஆர்ஜே டிம்பிள் கண்ணா, சச்சின் நாச்சியப்பன், சஞ்சனா நேமிதாஸ், சரவணன், தேனி முருகன், நாகைச்சுவைகள் வெற்றி, நாகைச்சுவைகள் அதியமான், ஆர்.ஜே.ஆனந்தி, அயாஸ் கான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் எம். சசிகுமார் மற்றும் கமலேஷ் ஜெகன் ஆகியோர் இணைந்து கேமியோ வேடத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மதன் எழுதி இயக்கி இருந்தார். இவர் முன்னதாக டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் இயக்குநர் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குநராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தினை சௌந்தர்யா ரஜினிகாந்த், பாசிலியன் நஸரத், மகேஷ் ராஜ் பசிலியன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் உலக அளவில் மொத்தம் ரூபாய் 35 கோடிகள் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.

ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது வித் லவ் படக்குழு:

இந்த நிலையில் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக படத்தின் ஓடிடி வெளியீடு நெட்ஃபிளிக்ஸில் என்று தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் படம் வருகின்ற 6-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவதுடன் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… Venky Atluri: நீங்கள் இதுவரை பார்த்திராத வகையில்.. விஸ்வநாத் & சன்ஸ் படம் குறித்து வெங்கி அட்லூரி!

வித் லவ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… டாக்ஸிக் – துரந்தர் 2 பட ரன்னிங் டைம்.. திரையரங்குகள் சந்திக்கும் சிக்கல்!

Follow Us
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ