25 நாட்களைக் கடந்த வித் லைவ் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு? தயாரிப்பாளர் வெளியிட்ட பதிவு

With Love Movie Total Collection After 25 Days: தமிழ் சினிமாவில் ரொமாண்டிக் காமெடி பானியில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் வித் லவ். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 25 நாட்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

25 நாட்களைக் கடந்த வித் லைவ் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு? தயாரிப்பாளர் வெளியிட்ட பதிவு

வித் லவ்

Published: 

02 Mar 2026 19:10 PM

 IST

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாகவும் அறிமுகம் ஆகி உள்ளார். அதன்படி டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகம் ஆன அபிஷன் ஜீவிந்த் தற்போது வித் லவ் படத்தின் மூலமாக நாயகனாகவும் அறிமுகம் ஆகி உள்ளார். தொடர்ந்து இவர் இயக்குநராக இயக்கியப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல நாயகனாக இவர் நடித்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படத்தில் நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக நடித்து இருந்தார். இவர் மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். இந்த நிலையில் இவர்களின் இருவரின் நடிப்பும் இந்த வித் லவ் படத்தில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவான இந்த வித் லவ் படத்தை இயக்குநர் மதன் எழுதி இயக்கி இருந்தார். இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. படம் கடந்த 6-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் இன்றுடன் படம் 25 நாட்களைக் கடந்துள்ளது. இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

25 நாட்களைக் கடந்த வித் லைவ் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு?

அதன்படி திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்த வித் லவ் படம் இன்றுடன் 25 நாட்களைக் கடந்துள்ளது. மேலும் படம் உலக அளவில் ரூபாய் 35 கோடிகளை வசூலித்து உள்ளதாகவும் படத்தின் தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்தின் பதிவில் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… விஸ்வநாத் & சன்ஸ்… இதுதான் சூர்யா 46 படத்தின் டைட்டில்!

சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சினிமாவில் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த நடிகர் ரியோ ராஜ் – வெளியானது அறிவிப்பு

Follow Us
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ