வெளியீட்டிற்கு 50 நாட்களே உள்ள பராசக்தி படம்… புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு
Parasakthi Movie : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் படம் பராசக்தி. இந்த நிலையில் பராசக்தி படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் 50 நாட்களே உள்ள நிலையில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

பராசக்தி
சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியாக இருக்கும் விஜய் டிவியில் பல ரியாலிடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக ஆவதற்கு முன்பு சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து வெள்ளித்திரையில் காமெடி நடிகராக அறிமுகம் ஆனார். இவர் காமெடி நடிகராக நடித்த படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். நாயகனாக நடிக்கத் தொடங்கிய முதல் சில ஆண்டுகளுக்கு தொடர்ந்து காமெடியை அதிக அளவில் மையமாக வைத்தே படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி காம்போவில் அதிக அளவில் இணைந்து நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து கடந்த சிலப் படங்களாக கதைகளுக்கு அதிக அளவில் முக்கியதுவம் கொடுத்து நடித்து வருகிறார். அதன்படி சமீப காலமாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மிகவும் அழுத்தமான கதைகளை மையமாக வைத்து வெளியாகி வருகின்றது. அதன்படி தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் பராசக்தி. பீரியட் ட்ராமாவாக உருவாகி வரும் இந்தப் படத்தை இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கி உள்ளார்.
புதிய போஸ்டரை வெளியிட்ட பராசக்தி படக்குழு:
அதன்படி இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது வெளியீட்டிற்கான போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. படம் வருகின்ற ஜனவரி மாதம் 14-ம் தேதி 2026 ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் 50 நாட்களே உள்ள நிலையில் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தில் இருந்து இரண்டாவது பாடலான ரத்னமாலா இன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… வடசென்னை மற்றும் அரசன் படங்கள் குறித்து ரசிகரின் ஒப்பீடு – வியந்து பேசிய வெற்றிமாறன்
பராசக்தி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
5️⃣0️⃣ days to go before the #Parasakthi storm takes over theatres
The Countdown Begins⏳#ParasakthiFromPongal#ParasakthiFromJan14@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash @DawnPicturesOff @redgiantmovies_ @Aakashbaskaran @sreeleela14… pic.twitter.com/zuit13achN
— DawnPictures (@DawnPicturesOff) November 25, 2025
Also Read… ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் விஜய்க்கு ட்ரிபியூட் செய்யும் படக்குழு – வைரலாகும் வீடியோ