Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிக்பாஸில் விக்ரமிற்கு வார்னிங் கொடுத்த பிரஜின்… என்ன நடந்தது?

Bigg Boss Tamil Season 9 : பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக உள்ள விக்ரம் மற்றும் பிரஜின் இடையே சல சலப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் ரசிகர்களிடையே தொடர்ந்து வைரலாகி வருகின்றது.

பிக்பாஸில் விக்ரமிற்கு வார்னிங் கொடுத்த பிரஜின்… என்ன நடந்தது?
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Nov 2025 16:32 PM IST

இந்தியாவில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. பிரபலங்கள் சிலரை ஒரே வீட்டில் 100 நாட்களுக்கு தங்கவைத்து எந்தவித வெளியுலக தொடர்பும் இல்லாமல் அவர்களுக்குப் பல போட்டிகள் வழங்குவார்கள். வெளியுலக தொடர்பு இல்லாமல் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து கேமராக்கள் மூலம் பதிவு செய்து ஒளிபரப்பப்படுகின்றது. இதனைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கும் இந்த நிகழ்ச்சி பிடித்துப்போய்விட்டது. பொதுவாகவே மற்றவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டும் மக்களுக்கு இந்த நிகழ்ச்சி தீனி போடும் விதமாக இருந்தது என்பதே குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்த நிகழ்ச்சி இந்தியாவில் முதன் முறையாக இந்தி மொழியில் தான் ஒளிபரப்பப்பட்டது. அங்கு நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து மற்ற தென்னிந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றது. தொடர்ந்து 7 சீசன்களாக தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் அவர் விலகுவதாக அறிவித்தப் பிறகு கடந்த 8-வது சீசனில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில சீசன்களாக போட்டிகளில் தொடர்ந்து மாற்றங்களை செய்து வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி குழு. ஒவ்வொரு சீசனிலும் என்னென்ன மாற்றங்கள் உள்ளது என்பதைக் காண ரசிகர்களும் தொடர்ந்து ஆவளுடன் இருந்து வருகின்றனர்.

பிக்பாஸில் விக்ரமிற்கு வார்னிங் கொடுத்த பிரஜின்:

இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியிலும் பல மாற்றங்கள் இருந்தது. தொடர்ந்து இதுவரை பிக்பாஸ் வரலாற்றில் நடக்காத ஒன்றாக கணவன் – மனைவி என பிரஜின் மற்றும் சாண்ட்ரா இருவரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் வைல்ட்கார்ட் போட்டியாளர்களாக உள்ளே வந்தனர்.

இந்த நிகழ்வு வீட்டில் உள்ள மற்றப் போட்டியாளர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்தது. இது தொடர்பாக விக்ரம் பல முறை தனக்கு இது வயித்தெரிச்சலாக இருப்பதாகவும் இந்த மாதிரியான விசயம் மிகவும் நியாயமற்ற முறையில் இருப்பதாகவும் தெரிவித்து வந்தார். இந்த நிலையில் இது குறித்து இன்று பிரஜின் மற்றும் விக்ரம் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ள வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

Also Read… ஹீரோவாக கவின்.. வில்லியாக ஆண்ட்ரியா.. மாஸ்க் படம் எப்படி இருக்கு – எக்ஸ் விமர்சனம் இதோ

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடித்துள்ள படத்தின் டைட்டில் டீசரை வெளியிடும் ரஜினிகாந்த்