மோகன்லால் – மம்முட்டி இணைந்து நடிக்கும் படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

MMMN Movie Teaser Update: மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டி. இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படம் MMMN. இந்தப் படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது என்பது குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளனர்.

மோகன்லால் - மம்முட்டி இணைந்து நடிக்கும் படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

MMMN படக்குழுவினர்

Published: 

01 Oct 2025 20:04 PM

 IST

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார்களாக இருப்பவர்கள் நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால். இவர்கள் இருவரும் தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். மலையாள சினிமாவில் இவர்களின் நடிப்பில் படங்கள் வெளியாகிறது என்றால் அது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர். அதன்படி இந்த 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே இவர்களின் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நட்டிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் இருவரும் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரையில் இணைந்து வருவதாக வெளியான அறிவிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அந்த வகையில் இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதன்படி இந்தப் படத்தில் நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் இருவரும் முன்னணி வேடத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் இணைந்து நடிகை நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்தப் படத்தை இயக்குநர் மகேஷ் நாராயணன் எழுதி இயக்கி உள்ளார்.

நாளை வெளியாகிறது MMMN படத்தின் டீசர்:

இந்த நிலையில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் படத்தின் அப்டேட்களை தொடர்ந்து எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக படக்குழு ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி MMMN  படத்தின் டீசர் நாளை 02-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு அன்று மதியம் 12 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read… ஹார்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ள ஹிருதயப்பூர்வம் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

நடிகர் மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ரொமாண்டிக் காமெடி வெப் சீரிஸ் பாக்கனுமா நீங்க? அமேசான்ல இருக்க இந்த When I Fly Towards You மிஸ் செய்யாதீர்கள்