பிக்பாஸில் விக்ரம் நல்லா கொளுத்தி போடுவார்… வியானா கருத்தால் கண்கலங்கிய விக்ரம்
Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் தற்போது இறுதி வாரத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக பிக்பாஸில் இருந்து முன்னதாக வெளியேறிய போட்டியாளர்கள் வீட்டின் உள்ளே வருகிறார்கள். அதன்படி முதலாவதாக தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் முன்னாள் போட்டியாளர் வியானா சென்றுள்ளார்.

பிக்பாஸ்
தமிழ் சின்னத்திரையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 92 நாட்கள் நிறைவடைந்துள்ளது. அதன்படி இந்த நிகழ்ச்சி கடந்த 5-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் வைல்கார்ட் போட்டியாளர்கள் உடன் மொத்தம் 24 பேர் கலந்துகொண்டனர். முன்னதாக வெளியான எந்த சீசனிலும் இல்லாத பல மாற்றங்கள் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி குழு நிகழ்ச்சியில் ஒரு பக்கம் ஏற்படுத்தி இருந்தாலும் போட்டியாளர்கள் ஒரு பக்கம் தங்கலால் முடிந்த அளவிற்கு தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரம் முடிவதற்கு முன்னதாகவே போட்டியாளர் நந்தினி தன்னால் இந்த நிகழ்ச்சியில் தொடர முடியாது என்று கூறி வால்க்கவுட் செய்தார். இது முதல் விசயம் ஆகும்.
இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் கடந்த 13-வது வாரம் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைப்பெற்றது. இதில் சாண்ட்ராவை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் புண்படுத்தியதாக பார்வதி மற்றும் கம்ருதினுக்கு எதிராக பார்வையாளர்கள் கொந்தளித்தனர். இதன் காரணமாக விஜய் சேதுபதி சனிக்கிழமை டாஸ்கில் அவர்கள் இரண்டு பேருக்கும் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து சுபிக்ஷா எவிக்டான நிலையில் தற்போது 6 போட்டியாளர்கள் இறுதி வாரத்தில் உள்ளனர்.
விக்ரம் குறித்து பிக்பாஸில் வெளிப்படையாக பேசிய வியானா:
இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் பணப்பெட்டி டாஸ்க் மட்டும் இன்றி செலிபிரேஷன் வாரம் என்பதால் பிக்பாஸ் வீட்டில் முன்னாள் போட்டியாளர்கள் வருகை தருகின்றனர். அதன்படி முதலாவதாக வியானா உள்ளே வந்துள்ளார். இவர் போட்டியாளர் விக்ரம் இந்த நிகழ்ச்சியில் செய்யும் விசயங்கள் அவர் போட்டியில் எப்படி எல்லாம் சூழ்ச்சி செய்கிறார் என வெளிப்படையாக பேசினார். இதனைக் கேட்ட விக்ரம் கண்ணீர் உடன் அங்கு இருந்து வெளியே செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… D 54 படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகளை தொடங்கிய படக்குழு – வைரலாகும் போட்டோ!
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day92 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/GXMzl3nUfz
— Vijay Television (@vijaytelevision) January 5, 2026
Also Read… அரசன் படத்தில் சிலம்பரன் இத்தனை தோற்றங்களில் இருப்பாரா? வைரலாகும் தகவல்