ஓஹோ எந்தன் பேபி படம் டிரண்டிங்கில் நம்பர் 1.. விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி !
Oho Enthan Baby Movie Crew : நடிகர் விஷ்ணு விஷாலின் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஓஹோ எந்தன் பேபி. இந்த படத்தில் அவரின் சகோதரன் ருத்ரா என்பவரைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியிருந்தார். இந்நிலையில், இப்படமானது இந்த வாரத்தில் டாப் 10 தமிழ்ப் படங்களில், நம்பர் 1 ட்ரெண்டிங் இடத்தை பிடித்துள்ளது.

ஓஹோ எந்தன் பேபி படக்குழு
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் விஷ்ணு விஷால் (Vishnu Vishal). இவர் தமிழில் பல படங்கள் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் லால் சலாம் (Lal Salaam). கடந்த 2024ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியான இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) முன்னணி கதாநாயகனாக நடித்திருந்தார். அதில் நடிகர் விஷ்ணு விஷாலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தை அடுத்தது புதிய படங்களிலும் நடித்து வருகிறார். இவரின் தயாரிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் ஓஹோ எந்தன் பேபி (Oho Enthan Baby). இந்த படத்தில் இவரின் சகோதரரான ருத்ராவை (Rudra) கதாநாயகனாக அறிமுகம் செய்துள்ளார். இந்த படமானது கடந்த 2025, ஜூலை 11ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது.
அதைத் தொடர்ந்து நெட்பிளிக்ஸ் (Netflix) ஓடிடியில் கடந்த 2025, ஆகஸ்ட் 8ம் தேதியில் வெளியானது. இந்நிலையில், இப்படமானது இந்த வாரத்தில் டாப் 10 தமிழ் படங்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதைக் கொண்டாடும் விதத்தில், ஓஹோ எந்தன் பேபி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியிருக்கின்றனர். இது குறித்து நெகிழ்ச்சி பதிவை நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க : ‘தலைவன் தலைவி’ பட ஓடிடி ரிலீஸ்… வெளியான அறிவிப்பு!
நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :
Glad to see our #OhoEnthanBaby trending at #1 on Netflix for a week and going strong ❤️
Reading a lot of nice messages from all over..Check it out this weekend if you haven’t..@TheActorRudra @Krishnakum25249 #Karunakaran @Romeopictures_ @VVStudioz @Netflix_INSouth pic.twitter.com/DMhl3cMVoO
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) August 15, 2025
ஓஹோ எந்தன் பேபி திரைப்படம்
இந்த படத்தை நடிகரும், இயக்குநருமான கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் மார்டன் லவ் சென்னை என்ற வெப் தொடரை இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து, ஓஹோ எந்தன் பேபி என்ற படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார் . இந்த படத்தில் நடிகர் ருத்ரா முன்னணி கதாநயான் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் தயாரிப்பாளரான விஷ்ணு விஷாலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவர்களுடன் நடிகர்கள், மிதிலா பல்கர், அஞ்சு குரியன், மிஷ்கின், ரெட்டின் கிங்ஸ்லி, கருணாகரன், பாலாஜி சக்தி வேல் உட்பட பல்வேறு பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படமானது காதல் சார்ந்த கதைக்களம் கொண்ட படமாக வெளியாகியிருந்தது. திரையரங்குகளில் மக்களிடையேயும் பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்றிருந்தது.
இதையும் படிங்க : ஜிம் ஒர்கவுட்டில் மிரட்டும் ரஜினிகாந்த்.. வைரலாகும் வீடியோ
ஓடிடியில் ட்ரெண்டிங் திரைப்படம் :
இந்த படமானது கடந்த 2025, ஆகஸ்ட் 8ம் தேதியில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. இந்த படமானது காதல் மற்றும் பீல் குட் கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இந்த வாரத்தில் டாப் 10 தமிழ் படங்களில் நம்பர் 1 ட்ரெண்டிங் இடத்தை பிடித்துள்ளது. இதைக் கொண்டாடும் விதத்தில் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறது. திரையங்ககுகளை விட ஓடிடியில் இந்த படமானது பெருமளவு வரவேற்பைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.