3 ஆண்டுகளை நிறைவு செய்த கட்டா குஸ்தி… 2-ம் பாகம் குறித்து அப்டேட் கொடுத்த விஷ்ணு விஷால்

3 Years Of Gatta Kushthi Movie: நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் முன்னதாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் கட்டா குஸ்தி. இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இரண்டாம் பாகம் குறித்து விஷ்ணு விஷால் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

3 ஆண்டுகளை நிறைவு செய்த கட்டா குஸ்தி... 2-ம் பாகம் குறித்து அப்டேட் கொடுத்த விஷ்ணு விஷால்

கட்டா குஸ்தி

Published: 

02 Dec 2025 20:14 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 02-ம் தேதி டிசம்பர் மாதம் 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் கட்டா குஸ்தி. ரொமண்டிக் ஸ்போர்ட்ஸ் காமெடி ட்ராமாவாக வெளியான இந்தப் படத்தை இயக்குநர் செல்ல அய்யாவு எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நட்டித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் கருணாஸ், முனிஷ்காந்த், காளி வெங்கட், ரெடின் கிங்ஸ்லி, ஸ்ரீஜா ரவி, கஜராஜ், நிகிலா சங்கர், ஹரீஷ் பெராடி, அஜய், சத்ரு, லிசி ஆண்டனி, எஸ்.ராஜபாண்டி, கலமண்டலம் மல்லிகா, மேத்யூ வர்கீஸ், மிப்பு, மாயி சுந்தர், பிரேமா பிரியா, சுமதி ஜி, செல்ல அய்யாவு என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பிரபல தயாரிப்பு நிறுவனங்களான RT டீம் வொர்க்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் ரவி தேஜா, விஷ்ணு விஷால், சுப்ரா மற்றும் ஆர்யன் ரமேஷ் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கட்டா குஸ்தி 2-ம் பாகம் குறித்து அப்டேட் கொடுத்த விஷ்ணு விஷால்:

இந்த நிலையில் இந்த கட்டா குஸ்தி படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பே தொடங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று மூன்று ஆண்டுகள் நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக போஸ்டர் வெளியிட்ட நடிகர் விஷ்ணு விஷால் கட்டா குஸ்தி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தயாராக உள்ளதகாவும் படம் வருகின்ற 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… வேள்பாரி நாவலை படமாக்க தயாராகும் இயக்குநர் சங்கர்… இணையத்தில் கசிந்த தகவல்

விஷ்ணு விஷால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… என் ரசிகர்கள் என்னை வழிபாடு செய்வதை நான் விரும்பவில்லை – சிவகார்த்திகேயன்

மனிதர்களை குளிப்பாட்டும் மெஷினை உருவாக்கிய ஜப்பான் - அப்படி என்ன ஸ்பெஷல்?
இந்த முட்டையின் விலை ரூ.236 கோடி தானாம்.. ஷாக் ஆகாதீங்க!!
நேபாளம் வெளியிட்ட புதிய 100 ரூபாய் நோட்டில் இடம்பெற்ற இந்திய பகுதி.. எல்லை குறித்து மீண்டும் உருவான சர்ச்சை!!
இந்தியாவின் கோடீஸ்வர பிச்சைக்காரர் இவர் தான்.. அவரது சொத்து மதிப்பு தெரியுமா?