இயக்குருடன் என்ன பிரச்னை? ‘மகுடம்’ படத்தை இயக்குவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஷால்

Vishal's Magudam : நடிகர் விஷால் தற்போது மகுடம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இயக்குருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக விஷாலே இந்தப் படத்தை இயக்குவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த நிலையில் விஷால் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அது குறித்து பார்க்கலாம்.

இயக்குருடன் என்ன பிரச்னை?  மகுடம் படத்தை இயக்குவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஷால்

விஷால்

Published: 

20 Oct 2025 19:13 PM

 IST

நடிகர் விஷால் (Vishal) தற்போது மகுடம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் இயக்குநராக ஈட்டி, ஐங்கரன் ஆகிய படங்களை இயக்கிய ரவி அரசு (Ravi Arasu) அறிவிக்கப்பட்டார். இந்தப் படத்தில் இளைஞர், வயதான நபர் என இரண்டு மாறுபட்ட வேடங்களில் விஷால் நடிக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சார்பாக ஆர்பி சௌத்ரி தயாரித்து வருகிறார். இந்தப் படத்துக்கு பூஜைப் போடப்பட்டு படப்பிடிப்பும் துவங்கியது. இந்த நிலையில் இயக்குநருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இந்தப் படத்தை விஷால் தானே இயக்கவருவதாகவும் தகவல் பரவி வருகிறது. இதனை விஷாலே புதிய போஸ்டரை வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளார்.

இயக்குநர் அவதாரம் எடுக்கும் விஷால்

நடிகர் விஷால் மகுடம் படத்தை தானே இயக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார். தீபாவளியை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகுடம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு இந்தப் படத்தை தானே இயக்கவிருப்பதாக விஷால் அறிவித்திருக்கிறார். அவரது பதிவில், இந்த தீபாவளி திருநாளில் நான் நடிக்கும் மகுடம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் இந்தப் படத்தின் மூலம் நான் இயக்குநராகிறேன் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். நான் எதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் சூழ்நிலை காரணமாக நான் இந்த முடிவை எடுக்கவேண்டியதாகிவிட்டது. இந்தப் படத்தை சில வேலைகளை திரும்ப செய்ய வேண்டியதிருக்கிறது. இந்த முடிவு தயாரிப்பாளர்களை பாதுகாக்கவும், ரசிகர்களுக்கு சிறந்த முடிவை எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : ரவிக்குமார் சார் ஷூட்டிங்கில் மைக்கை தூக்கி அடிப்பாரு.. சரத்குமார் சொன்ன உண்மை!

விஷாலின் இன்ஸ்டாகிராம் பதிவு

 

தற்போது வெளியிட்டப்பட்டிருக்கும் போஸ்டரில் இந்தப் படத்தின் திரைக்கதை, இயக்கம் விஷால் எனவும் கதை ரவி அரசு எனவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது. மார்க் ஆண்டனி படத்துக்கு பிறகு இந்தப் படத்தில் மூன்று விதமான தோற்றங்களில் விஷால் நடிக்கிறார். மேலும் ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன், அஞ்சலி ஆகியோர் நடிக்க, யோகி பாபு, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இதையும் படிக்க :  வடிவேலுவின் சூப்பர் ஹிட் பாய் காமெடி உருவான விதம் – நடிகர் மாரிமுத்து சொன்ன விசயம்!

விஷால் நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜூன் இயக்கும் படங்களில் உதவி இயக்குநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அர்ஜூனின் வேதம் படத்தில் விஷால் உதவி இயக்குநராக பணியாற்றினார். முன்பு துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பின்போது இயக்குநர் மிஷ்கினுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அந்தப் படத்தை தானே இயக்குவதாக விஷால் அறிவித்தார். ஆனால் இதுவரை அந்தப் படம் துவங்கப்படாமலே இருப்பது குறிப்பிடத்தக்கது.