Vishal: அந்த கதை விஜய்காக எழுதியது… நான் நடித்து மாஸ் ஹிட் கொடுத்தேன் – விஷால் சொன்ன விஷயம்!

Vishal About Sandakozhi Movie Script: தமிழ் பிரபல நடிகராக இருந்துவருபவர் விஷால். இவரின் முன்னணி நடிப்பில் தமிழில் தொடர்ந்து திரைப்படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய விஷால், விஜய்க்காக எழுதிய கதையில் நடித்து ஹிட் கொடுத்த திரைப்படம் பற்றி ஓபனாக பேசியுள்ளார்.

Vishal: அந்த கதை விஜய்காக எழுதியது... நான் நடித்து மாஸ் ஹிட் கொடுத்தேன் - விஷால் சொன்ன விஷயம்!

விஷால்

Published: 

19 Oct 2025 17:59 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஷால் (Vishal). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இந்த 2025ம் ஆண்டில் இவரின் முன்னணி நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த திரைப்படம்தான் மத கஜ ராஜா (Madha Gaja raja). இந்த திரைப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் அஞ்சலி மற்றும் வரலட்சுமி சரத்குமார் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த 2013ம் ஆண்டில் எடுக்கப்பட்ட நிலையில், சுமார் 12 வருடங்களுக்கு பிறகு இந்த 2025ம் ஆண்டில் திரையில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்திருந்தது. இந்த படமானது சுமார் ரூ 55 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அடுத்ததாக விஷாலின் நடிப்பில் தயாராகிவரும் படம்தான் மகுடம் (Magudam).

இந்த படத்தை இயக்குநர் ரவி அரசு (Ravi Arasu) இயக்கிவருகிறார். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டில் வெளியாகவும் என கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய விஷால், விஜய்க்காக எழுதிய கதையில் நடித்து வெற்றி கொடுத்தது பற்றி ஓபனாக பேசியுள்ளார். அது என்ன கதை மற்றும் எந்த படம் என்பது பற்றி விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : வாகை சூட வா படத்தில் கலர் தியரி இப்படி இருக்கும் – இயக்குநர் சர்குணம் ஓபன் டாக்

விஜயின் கதையில் நடித்து வெற்றி கொடுத்தது குறித்து விஷால் சொன்ன விஷயம் :

அந்த நேர்காணலில் பேசிய விஷால், “நான் 10 வகுப்பு படிக்கும்போது, இயக்குநர் லிங்குசாமி ஒரு கதை எழுதியிருப்பதாக கேள்விப்பட்டேன். அந்த கதையை அவர் விஜய்க்காக எழுதியிருப்பதாக கூறினார்கள். அதுதான் சண்டக்கோழி படம். எனக்கு தயாரிப்பாளர்கள் சில என்னிடம் கூறினார்கள், இந்த மாதிரி லிங்குசாமி மாஸான கதை ஒன்றை எழுதியிருக்கிறார் என கூறினார்கள். நான் உடனே எனது வண்டியை எடுத்துக்கொண்டு லிங்குசாமியிடம் சென்றேன். அந்த நேரத்தில்தான் அஜித் குமாரின் ஜி என்ற திரைப்படத்தை அவர் இயக்கியிருந்தார்.

இதையும் படிங்க : பிரபல தெலுங்கு நடிகரின் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்? வைரலாகும் தகவல்!

அப்போது நான் லிங்குசாமியிடம், நீங்கள் அருமையான கதை ஒன்றை எழுதியிருப்பதாக கேள்விப்பட்டேன், அதில் நான் பண்ணுறேன் பா என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் இந்த கதை மாஸ் ஹீரோவிற்காக எழுதியிருக்கிறேன். நீ எப்படி பண்ணமுடியும் என் கேட்டார். நான் அவரிடம் பிளீஸ் நான் இந்த படத்தை பண்ணுகிறேன் என்று கேட்டேன். மேலும் இந்த படத்திற்காக நான் 2 வருடங்களாக காத்திருந்தேன் . இறுதியாக இந்த படத்தில் ன்ன நடிப்பதற்கு லிங்கு சாமி ஒத்துக்கிட்டாரு. மேலும் அந்த படமும் வெளியானது. வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்திருந்ததாக” நடிகர் விஷால் தெரிவித்திருந்தார்.

மகுடம் திரைப்படத்தின் முதல் பார்வை குறித்து விஷால் வெளியிட்ட பதிவு :

இந்த மகுடம் படத்தை இயக்குநர் ரவி அரசு இயக்க, விஷால் 3 வேடங்களில் நடிக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடித்துவருகிறார். மேலும் நடிகை அஞ்சலியும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பித்தக்கது.

Related Stories
நான் சொன்னதும் மழை வந்துச்சா பாடல் முதலில் விக்ரம் படத்திற்காக பண்ணது – ஜிவி பிரகாஷ் குமார்
Sarathkumar: ரவிக்குமார் சார் ஷூட்டிங்கில் மைக்கை தூக்கி அடிப்பாரு.. சரத்குமார் சொன்ன உண்மை!
அருண் விஜய்யின் ரெட்ட தல படம் இப்படித்தான் இருக்கும்- இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் ஓபன் டாக்!
வடிவேலுவின் சூப்பர் ஹிட் பாய் காமெடி உருவான விதம் – நடிகர் மாரிமுத்து சொன்ன விசயம்!
மாரி செல்வராஜ் உலகத்திலிருந்து வெளியே வரவே முடியவில்லை – பைசன் படத்தை வெகுவாகப் பாராட்டிய இயக்குநர் லிங்குசாமி
Dhruv Vikram: அதற்காக எங்க அப்பா ரொம்ப அடிச்சாரு.. காரணம் எங்க அக்காதான்- துருவ் விக்ரம் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!