சத்தமே இல்லாமல் நடந்த விஷால் – சாய் தன்ஷிகா திருமண நிச்சயம்… வைரலாகும் போட்டோஸ்!

Vishal and Sai Dhanshika Engagement: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால். இவருக்கு 45 வயதைக் கடந்தும் திருமணம் ஆகாமல் இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது காதலை அறிவித்தார். அது வேறு யாரும் இல்லை நடிகை சாய் தன்ஷிகா தான்.

சத்தமே இல்லாமல் நடந்த விஷால் - சாய் தன்ஷிகா திருமண நிச்சயம்... வைரலாகும் போட்டோஸ்!

விஷால் - சாய் தன்ஷிகா

Published: 

29 Aug 2025 13:45 PM

தமிழ் சினிமாவில் 2004-ம் ஆண்டு நாயகனான அறிமுகம் ஆன நடிகர் விஷால் தற்போது நடிப்புத் துறையில் 20 வருடங்களை கடந்து முன்னணி நடிகராக இருக்கிறார். இவரது நடிப்பில் வெளியான பெரும்பான்மையான படங்கள் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்தவைகளாகவே இருக்கும். தொடர்ந்து இவரது படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வந்தாலும் 45 வயதைக் கடந்தும் விஷால் திருமணம் ஆகாமல் சிங்கிளாக இருந்தது அவரது ரசிகர்களுக்கும் குடும்பத்தினருக்கும் வருத்தமான ஒன்றாகவே இருந்தது. மேலும் முன்பு ஒரு திருமண நிச்சயம் நடந்து பின்பு பாதியிலேயே அந்த உறவு முறிந்தது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து விஷாலுக்கு எப்போது திருமணம் நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது காதல் குறித்து வெளிப்படையக பேசினார்.

அதில் நடிகை சாய் தன்ஷிகா உடன் தான் காதலில் இருப்பதாகவும். விரைவில் அவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயம் நடந்து முடிந்ததும் திருமணம் நடக்கும் என்றும் தெரிவித்து இருந்தார். நடிகர் சங்க பொருப்பில் இருக்கும் நடிகர் விஷால் முன்னதாக நடிகர் சங்க கல்யாண மண்டபம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு முதலில் அவரது திருமணம் தான் அதில் நடக்கும் என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இவர்களின் காதல் உறுதியான பிறகு நடிகர் சங்க கட்டட வேலையும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது என்றும் விஷால் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.

எளிமையான முறையில் நடந்து முடிந்த நடிகர்கள் விஷால் – சாய் தன்ஷிகா நிச்சயம்:

இந்த நிலையில் இன்று 29-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு நடிகர் விஷால் தனது 48-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில் விஷால் அவரது எக்ஸ் தள பதிவில் ஒரு பதிவை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

அதில் அவருக்கும் இன்று நடிகை சாய் தன்ஷிகா உடன் திருமண நிச்சயம் நடைப்பெற்றதாக தெரிவித்து இருந்தார். மேலும் இருவரும் மோதிரம் மாற்றிக்கொள்ளும் புகைப்படமும் குடும்பத்திரன் உடன் இருக்கும் புகைப்படத்தையும் விஷால் அந்த எக்ஸ் தள பதிவில் பதிவிட்டு இருந்தார். இது தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

Also Read… Sivakarthikeyan : அனிருத்தின் திருமணம் எப்போது? சிவகார்த்திகேயன் சொன்ன ஆச்சர்ய பதில் இதோ!

நடிகர் விஷால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Sivakarthikeyan : 15வது ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்.. ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!