தனுஷ் பட இயக்குநருடன் இணையும் நடிகர் ஷண்முகப் பாண்டியன் – வைரலாகும் வீடியோ

Kombuseevi Movie Pre Release Event: மறைந்த நடிகரும் அரசியல் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் ஷண்முகப் பாண்டியன் தற்போது சினிமாவில் நாயகனாக வலம் வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக கொம்புசீவி என்ற படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் பட இயக்குநருடன் இணையும் நடிகர் ஷண்முகப் பாண்டியன் - வைரலாகும் வீடியோ

ஷண்முகப் பாண்டியன்

Published: 

15 Dec 2025 17:46 PM

 IST

தமிழ் சினிமாவில் பல நூறு படங்களில் நடித்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற நடிகர் விஜயாகந்த். இவரை ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் செல்லமாக கேப்டன் என்றே அழைப்பார்கள். தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டுமே தனது நடிப்பை வெளிப்படுத்திவந்த நடிகர் விஜயகாந்த் மற்ற மொழிப் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் அதனை தொடர்ந்து தவிர்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் வெளியான படங்களால் மட்டும் ரசிகர்களும் பொது மக்களும் விஜயகாந்தை கொண்டாடவில்லை. சினிமாவில் நடிப்பதை தாண்டி தனது மக்களுக்காக தினமும் உணவு அளிப்பது மட்டும் இன்றி அவர்களுக்கு தேவையான பல உதவிகளை நடிகர் கேப்டன் விஜயகாந்த் செய்துள்ளார். இதன் காரணமாகவே விஜயாக்ந்தின் இறப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டும் இன்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் பெருத்த சோகத்தை ஏற்படுத்டியது குறிப்பிடத்தக்கது.

அதன்படி நடிகர் விஜயகாந்திற்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் முதல் மகன் விஜய பிரபாகரன் அரசியலையும் இரண்டாவது மகன் ஷண்முகப்பாண்டியன் நடிப்பு துறையிலு இருக்கிறார். இவரது நடிப்பில் முன்னதாக படங்கள் எதுவும் பெரிய அளவில் வெளியாகவில்லை என்றாலும் தற்போது தொடர்ந்து படங்கள் வெளியாகி வருவது  குறிப்பிடத்தக்கது. முன்னதாக இவரது நடிப்பில் படத்தலைவன் படம் கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்று இருந்தது. இந்த நிலையில் அடுத்ததாக தற்போது கொம்புசீவி படம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது.

தனுஷ் பட இயக்குநருடன் இணையும் நடிகர் ஷண்முகப் பாண்டியன்:

இந்த கொம்புசீவி படம் வருகின்ற 19-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் நிலையில் நேற்று படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் திரையுலகப் பிரலங்கள் பலர் கலந்துகொண்டனர். மேலும் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தை இயக்கிய இயக்குநர் மித்ரன் ஆர் ஜவகரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவரை குறிப்பிட்டு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Retta Thala: அருண் விஜய்யின் ஆக்ஷன் பீக்… ‘ரெட்ட தல’ படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகிறது தெரியுமா?

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2-வின் வெற்றியாளர் இவர்தான்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்

தாமதமான இண்டிகோ விமானம்.... பெட் சீட்டை கையோடு எடுத்து வந்த பயணி
இந்த இண்டிகோ தாமதமாகாது.... இண்டிகோ விமானம் போல டிசைன் செய்யப்பட்ட ஆட்டோ
அமெரிக்கா போறீங்களா? இனி டிஎன்ஏ, சமூக வலைதள பரிசோதனை கட்டாயம்
பாகிஸ்தான் திருமணத்தில் துரந்தர் பட பாடல்