Thalaivan Thalavii: மாபெரும் வெற்றி.. ‘தலைவன் தலைவி’ வசூல் நிலவரம் இதோ!

Thalaivan Thalavii Movie Box Office Collection : மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் முன்னணி நடிப்பில், இறுதியாக வெளியான திரைப்படம் தலைவன் தலைவி. இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இப்படமானது உலகளாவிய வசூலில் 6 நாட்கள் முடிவில், எவ்வளவு வசூல் செய்துள்ளது எனப் படக்குழு அறிவித்துள்ளது.

Thalaivan Thalavii: மாபெரும் வெற்றி.. தலைவன் தலைவி  வசூல் நிலவரம் இதோ!

தலைவன் தலைவி திரைப்படம்

Published: 

01 Aug 2025 15:11 PM

இயக்குநர் பாண்டியராஜின் (Pandiraaj) இயக்கத்தில், மக்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்று வரும் திரைப்படம்தான் தலைவன் தலைவி (Thalaivan Thalavii). இந்த படத்தில் முன்னணி நாயகனாக நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) நடித்துள்ளார். இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் விஜய் சேதுபதியின் 51வது திரைப்படமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங்கும் தொடர்ந்து, தென்மாவட்டங்களில் சிறப்பாக நடைபெற்று வந்திருந்தது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் (Nithya Menen) நடித்துள்ளார். இவர்கள் ஜோடியும் இப்படத்தில் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது என்றே கூறலாம்.

இப்படமானது தமிழில் கடந்த 2025, ஜூலை 25ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது. இந்த படமானது வெளியாகி 6 நாட்களைக் கடந்திருக்கும் நிலையில், இதுவரை உலகமெங்கும் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதைப் பற்றிய அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படிஇப்படம் இதுவரை உலகளாவிய வசூலில் சுமார் ரூ.50 கோடியை வசூல் செய்திருப்பதாகப் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிக்கந்தர் படம் தோல்வி.. காரணம் சொன்ன ஏ.ஆர். முருகதாஸ்!

தலைவன் தலைவி படக்குழு வெளியிட்ட வசூல் அறிவிப்பு :

தலைவன் தலைவி படத்தின் தெலுங்கு ரிலீஸ் :

நடிகர் விஜய் சேதுபதி, தற்போது தெலுங்கு சினிமாவிலும் கதாநாயகனாகப் படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார். இந்நிலையில், இந்த தலைவன் தலைவி திரைப்படமானது, தெலுங்கில் சார் மேடம் என்ற தலைப்பில் வெளியாகியிருக்கிறது. இந்த படமானது தெலுங்கில் இன்று 2025, ஆகஸ்ட் 1ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. இந்த படத்தின் ட்ரெய்லரை பார்த்து, தெலுங்கு முன்னணி நடிகர் பிரபாஸும் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து இப்படமானது தெலுங்கிலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் கிங்டம் படம்.. முதல் நாள் வசூல் விவரம்!

தலைவன் தலைவி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது :

இந்த தலைவன் தலைவி திரையரங்குகளில் வெளியாகி 4 அல்லது 6 வாரங்களுக்கு பிறகே, ஓடிடியில் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் நிலையில், இப்படத்தின் முதல் பாடலான பொட்டல முட்டையே என்ற பாடல் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த படத்தை ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனமானது வாங்கியுள்ளதாம். இப்படமானது வரும் 2025 ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் அல்லது செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் ஓடிடியில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.