Vijay Sethupathi: ‘தேர்தல் எல்லாம் நமக்கு செட் ஆகாது சார்..! – நடிகர் விஜய் சேதுபதி பேச்சு!

Vijay Sethupathi About Election: தமிழ் சினிமாவை கடந்து தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் விஜய் சேதுபதி. இவர் சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் ஹேப்பி ராஜ் படத்தின் ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியின்போது பேசிய இவர், தேர்தல் குறித்து மனம் திறந்துள்ளார்.

Vijay Sethupathi: தேர்தல் எல்லாம் நமக்கு செட் ஆகாது சார்..! - நடிகர் விஜய் சேதுபதி பேச்சு!

விஜய் சேதுபதி

Updated On: 

17 Mar 2026 16:03 PM

 IST

நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவருகிறார். தமிழ் சினிமாவில் இவர் கதாநாயகனாக படங்களில் நடித்துவந்த நிலையில், தற்போது தெலுங்கு சினிமாவிலும் கதாநாயகனாக நடிக்க தொடங்கிவிட்டார். இயக்குநர் பூரி ஜெகன்நாத் (Puri Jagannath) இயக்கத்தில், இவர் தெலுங்கில் நடித்துள்ள படம்தான் ஸ்லம் டாக் (Slum Dog). இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கியிருந்த நிலையில், 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முழுமையாக நிறைவடைந்திருந்தது. இந்த படமானது வித்தியாசமான ஆக்ஷன் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. ஆனாலும் இன்னும் இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. இப்படத்தை அடுத்தாக விஜய் சேதுபதி தமிழில் “பாக்கெட் நாவல்” (Pocket Novel) என்ற படத்தில் நடித்துவருகிறார்.

இதை இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்க, விஜய் சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் இணைந்து நடித்துவருகிறர்கள். அந்த வகையில் சமீபத்தில் இவர், ஜி.வி. பிரகாஷ் குமாரின் (GV. Prakash Kumar) ஹேப்பி ராஜ் (Happy Raj) பட ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர். அந்த நிகழ்ச்சியின்போது பேசிய அவர், தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் குறித்து அவர் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: சினிமாவில் ஏ.ஐ சிறந்த ஐடியாவை கொடுக்கிறது.. ஆனால் – விஜய் சேதுபதி பகிர்ந்து சுவாரஸ்ய விஷயம்!

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் குறித்து மனம் திறந்த நடிகர் விஜய் சேதுபதி:

அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் விஜய் சேதுபதி பேசுகையில், “சார் நமக்கெல்லாம் அது செட் ஆகாது சார். அது என்னவென்றால், ஏன் வேண்டாம் என சொன்னேன் என்றால், எதாவது பஞ்சாயத்திற்கு தீர்ப்பு சொல்லபோயி, அது அப்புறம் நம்ம படத்திற்கு எதாவது செஞ்சிருவாங்கனு பயத்தில் தான் வேணான்னு சொல்லிட்டேன். பொறுப்புன்னு ஒன்னு கொடுத்தால், அதை பொறுப்பாக செய்யணும்” என அந்த நிகழ்ச்சியின்போது விஜய் சேதுபதி தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: ராக்கிங் சாய்… பவழ மல்லி வீடியோ பாடலை பாராட்டிய சூர்யா!

தனது புது வெப் தொடர் ட்ரெய்லர் குறித்து விஜய் சேதுபதி வெளியிட்ட பதிவு:

நடிகர் விஜய் சேதுபதி படங்களில் நடிப்பதை தொடர்ந்து, தற்போது வெப் தொடர்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்திவருகிறார். அந்த வகையில் இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள புது வெப் தொடர் தான் முத்து என்கிற காட்டான். இது முழுமையாக தயாராகியுள்ள நிலையில் வரும் 2026 மார்ச் 27ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக காத்திருக்கிறது. இதையடுத்து தமிழில் கிட்டத்தட்ட தனது கைவசத்தில் 8-க்கும் மேற்பட்ட படங்களை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
அமெரிக்க உலகப்போர் நினைவு சின்னம் முன்பு நடனமாடிய இந்தியர் - சர்ச்சையாகும் வீடியோ
ஈரானின் புதிய தலைவர் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.92 கோடி பரிசு - அமெரிக்க அறிவிப்பு
கேஸ் தட்டுப்பாடு - புதிதாக ஒரு இணையதளத்தையே உருவாக்கிய இளைஞர்கள்
மஹாராஜா 2 அறிவிப்பை வெளியிட்ட விஜய் சேதுபதி - மகிழ்ச்சியில் ரசிகர்கள்